நீங்கள் உண்மையிலேயே வாழ்க்கையை விரும்புகிறீர்களெனில் நேரத்தை வீணாக்காதீர்கள். நேரங்களால் உருவானதே வாழ்க்கை! -ப்ரூஸ் லீ
கீழே விழுவதும் பின்பு மேலே எழுவதும் நம் வாழ்க்கைப் பயணத்தில் மிக முக்கியமானது, நம் இதயதுடிப்பை அளவிடும் கருவிக்கூட ஒரே நேர்கோட்டை காட்டினால் நாம் பிணம் என்றே பொருள். -ரத்தன் டாடா
ஒவ்வொரு நொடியும் உங்கள் வாழ்வை மாற்றுவதற்கான வாய்ப்பே. ஏனெனில் எந்த கணம் வேண்டுமானாலும் நீங்கள் உங்கள் எண்ணங்களை மாற்றி கொள்ள இயலும்! -ரோண்டோ பைரின்
ஒரு இடத்தின் சூழ்நிலை உங்களை கட்டுப்படுத்துவதற்கு வாய்ப்பளிகாதீர்கள். உடனடியாக அந்த இடத்தை விட்டு மாறுங்கள்.. -ஜாக்கி சான்
எனக்கு என்ன நடந்தது என்பது 10 சதவீதமும், அதை நான் எப்படி எதிர்கொண்டேன் என்பது 90 சதவீதமும் கொண்டதுதான் வாழ்க்கை -சார்லஸ் சுவிண்டோல்