எப்போதாவது முயற்சித்து தோல்வியடைந்திருக்கிறீர்களா? பரவாயில்லை, மறுபடியும் முயற்சியுங்கள், மறுபடியும் தோல்வியடையுங்கள், இன்னும் சிறப்பாக -சாமுவெல் பெக்கெட்
இங்கு உயர்ந்தோர் தாழ்ந்தோர் யாருமில்லை அனைவரும் சமமும் இல்லை ஒவ்வொருவரும் தனித்தன்மையுடைய ஒப்பீடற்றவர்கள் நீங்கள் நீங்கள்தான், நான் நான்தான் -ஓஷோ
உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கைவாழத் தொடங்குவதற்க்கான முதல் அறிகுறி! -சுவாமி விவேகானந்தர்
எவர் ஒருவர் குறிக்கோளுடன் போராடுகிறாரோ அவரே வெற்றி பெறுகிறார், ஏனெனில் தாம் எங்கு செல்கிறோம் என்று அவருக்கு தெரியும்…! -ஏர்ல் நைட்டிங்கேல்
தைரியத்தின் அடிப்படையிலேயே ஏறக்குறைய ஒரு முரண்பாடு உள்ளது. அது, வாழ்வதற்கான ஒரு வலுவான ஆவல் சாவதற்கும் துணிவதிலேயே உள்ளது. -ஜி கே செஸ்டர்டன்
மொத்த உலகமும் முடியாது என்று சொல்லும்போது, ‘ஒருவேளை முடியலாம்’ என்று மெல்லியதாக உங்களுக்கு கேட்கும் குரலே நம்பிக்கை
என் வாழ்வில் எனக்கு மிக அதிகமான துன்பங்களிருக்கின்றன, ஆனால் அது என் உதடுகளுக்கு தெரியாது. அவை எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கும் -சார்லி சாப்ளின்
புதிய குறிக்கோளை அமைத்து கொள்ளவும், புதிய கனவுகளை காணவும் எப்போதும் வயது ஒரு தடையில்லை -சி எஸ் லெவிஸ்
வெற்றி மிக அருகில் உள்ளது என்பதை அறியாமல் முயற்சியை கை விடுவதே வாழ்வில் பல தோல்விகளுக்கு காரணம் -தாமஸ் ஆல்வா எடிசன்