நேரம் போய்க்கொண்டேதான் இருக்கும். எனவே நீ செய்யவேண்டியதை செய். அதுவும் இப்போதே செய். காத்திருக்காதே. -ராபர்ட் டி நீரோ
நீங்கள் உண்மையிலேயே வாழ்க்கையை விரும்புகிறீர்களெனில் நேரத்தை வீணாக்காதீர்கள். நேரங்களால் உருவானதே வாழ்க்கை! -ப்ரூஸ் லீ
தொடங்குவதற்கு மிகச் சரியான தருணம் என்று ஒன்று கிடையாது. இப்பொழுதே தொடங்குங்கள். செய்யும் போது தான் கற்றுக் கொள்ள முடியும் -ஜேக் கேன்பீல்ட்
குறிப்பபிட்ட நேரத்திற்காகவோ அல்லது மனிதருக்காகவோ காத்திருந்தால், மாற்றம் வாராது, நாம் நமக்காக தான் காத்திருக்கிறோம், நாம் தாம் அந்த மாற்றம்! -பராக் ஒபாமா
கோழைக்கு மாற்றம் ஒரு பயம், செல்வந்தனுக்கு மாற்றம் ஒரு அச்சுறுத்தல், நம்பிக்கையாளனுக்கு மாற்றம் ஒரு வாய்ப்பு. -நிடோ யூபென்
சரியான தருணத்திற்காக காத்திருக்காதீர்கள், கிடைக்கின்ற தருணத்தை சரியாக பயன்படுத்த கற்றுக் கொள்ளுங்கள்!
ஓட்டப் பந்தயத்திற்கு ஆயத்தமாக நிற்பவர்களிலே எவனாவது “இது நல்ல காலந்தானா!” என்று சிந்திப்பானா? பந்தயத்தொடக்கத்திற்கான மணியொலி எப்போது காதில் விழும் என்றல்லவா காத்திருப்பான்?