நான் விரும்பிய காரியங்களை என்னால் செய்ய முடியாது என்பதை உணரும் வரை நான் ஒரு அடிமை என்பது எனக்குத் தெரியவே இல்லை. -பிரடெரிக் டக்ளஸ்
என் அம்மா எப்போதும் என்னிடம் சொல்வது: வாழ்வதற்கான காரணம் எதையும் உன்னால் கண்டுபிடிக்க முடியாவிட்டால், சாவதற்காக ஒரு காரணத்தை கண்டுபிடிப்பது மேல் -டுபக் ஷகூர்
கண்ணாடியில் புன்னகை செய்யுங்கள். ஒவ்வொரு காலையும் இதை செய்யும்போது, நீங்கள் உங்கள் வாழ்வில் ஒரு பெரிய வித்தியாசத்தை உணரத் தொடங்குவீர்கள். -யோகோ ஓனோ
ஒட்டுமொத்த மனித குலத்தின் கூட்டு பங்களிப்பால் உருவாக்கப்பட்டது இயற்பியல். அதில் கிழக்கு மேற்கு, தெற்கு வடக்கு அனைத்திற்கும் சமமான பங்கு உண்டு -அப்துஸ் சலாம்
பழக்கங்களை எளிதாக பெற முடியாது. அனுபவத்தின் மூலம் பெறப்படும் சோதனை மற்றும் துன்பங்களின் வழியாகவே ஆன்மாவை வலுவூட்டவும், லட்சியத்தை தூண்டவும், அதன்மூலமே வெற்றியை அடையவும் முடியும். -ஹெலன் கெல்லர்
90% கருப்பு நிறத்தவர்களை கொண்ட நாட்டில், கருப்பு நிறத்தை கொண்டவர்கள் தாழ்வு மனப்பான்மையுடன் இருப்பது வேதனை. கருப்பாய் இருங்கள், அழகாய் இருங்கள்! -நந்திதா தாஸ்
தனியாக நடக்க தயாராக இருங்கள். உங்களுடன் தொடங்கும் பலர் நீங்கள் முடிக்கும்போது உங்களுடன் இருக்க மாட்டார்கள்
நீங்கள் சொல்வதை நான் மறுக்கிறேன், ஆனால் நீங்கள் அதை சொல்வதற்கான உரிமைக்காக சாகும் வரை போராடுவேன். -வால்டேர்
முன்னோக்கி செல்ல பல வழிகள் உள்ளன, ஆனால் இங்கேயே நிற்பதற்கு ஒரே ஒரு வழி மட்டுமே உள்ளது. -ப்ராங்ளின் ரூஸ்வெல்ட்
சிறந்த ஐடியாக்கள் வேடிக்கைகளாகவே சிந்தனையில் வரும். முடிந்தவரை வேடிக்கையாகவே சிந்தியுங்கள். -டேவிட் ஒகில்வி
படைப்பாற்றல் என்பது தவறுகள் செய்ய உங்களை அனுமதித்துக்கொள்வது. படைப்பு என்பது எந்த தவறை வைத்துக்கொள்வது என்பதை தெரிந்துகொள்வது -ஸ்காட் ஆடம்ஸ்