வெகுமக்ககளின் சிந்தனையற்ற ஒப்புதலை விட, ஒற்றை அறிவார்ந்த மனிதரின் கடுமையான விமர்சனத்தை நான் மிகவும் விரும்புகிறேன். -ஜோகன்னஸ் கெப்லர்
முடிவெடுப்பதற்கு முன் ஆயிரம் முறை வேண்டுமானாலும் சிந்தியுங்கள், ஆனால் தொடங்கியப் பின் ஆயிரம் தடைகள் வந்தாலும் பின் வாங்க கூடாது -அடால்ப் ஹிட்லர்
நிறைய படித்து, மூளையை குறைவாக பயன்படுத்துபவன், சிந்தனை என்னும் சோம்பலில் விழுகிறான் -ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
தினமும் ஒரு சதவீதம் உங்களை மேம்படுத்தினால் போதும், சிந்தியுங்கள், 100 நாட்களில் முழுமையாய் மேம்பட்டவராகிவிடுவீர்கள்
கனவு காணுங்கள், கனவு காணுங்கள், கனவு காணுங்கள். கனவுதான் சிந்தனையாகவும், சிந்தனைதான் செயலாகவும் மாறுகிறது. -ஆ ப ஜெ அப்துல் கலாம்
ஒரு மகாராணியப் போல சிந்தியுங்கள். ஒரு மகாராணி தோல்வியைக் கண்டு அஞ்சுவதில்லை. தோல்வி என்பது வெற்றியின் மற்றொரு படி -ஓப்ரா வின்ப்ரே
ஓட்டப் பந்தயத்திற்கு ஆயத்தமாக நிற்பவர்களிலே எவனாவது “இது நல்ல காலந்தானா!” என்று சிந்திப்பானா? பந்தயத்தொடக்கத்திற்கான மணியொலி எப்போது காதில் விழும் என்றல்லவா காத்திருப்பான்?