நீங்கள் சிலரை வெல்லலாம், சிலரிடம் தோற்கலாம். ஆனாலும் தொடர்ந்து செல்லுங்கள், உங்களுக்கு நீங்களே சவாலாயிருங்கள், நீங்கள் ஒரு சிறந்த மனிதனாக, நல்ல தனி மனிதனாக, சிறந்த போராளியாக ஆகிவிடுவீர்கள் -கோனார் மெக்ரிகெர்
ஒன்று முக்கியமென்றால், தோல்விக்கே அதிக வாய்ப்பு என தெரிந்தாலும், அதை நீங்கள் செய்ய வேண்டும்! -எலன் மஸ்க்
தோல்வியின் ஆபத்திற்கு நீங்கள் கொடுக்கும் விலை, முயற்சினையின்மையின் துயரத்தைவிட குறைவானதாகவே இருக்கும் -ராபின் சர்மா
உங்கள் வாழ்க்கையின் எந்த சூழலிலும் முடியாதென்று எதுவும் கிடையாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள் -ஆர். மாதவன்
எப்போதாவது முயற்சித்து தோல்வியடைந்திருக்கிறீர்களா? பரவாயில்லை, மறுபடியும் முயற்சியுங்கள், மறுபடியும் தோல்வியடையுங்கள், இன்னும் சிறப்பாக -சாமுவெல் பெக்கெட்
வெற்றி மிக அருகில் உள்ளது என்பதை அறியாமல் முயற்சியை கை விடுவதே வாழ்வில் பல தோல்விகளுக்கு காரணம் -தாமஸ் ஆல்வா எடிசன்
வெற்றிக்கு அருகே செல்ல மின்தூக்கி எதுவும் கிடையாது படிகட்டுகளை தான் பயன் படுத்த வேண்டும் அதுவும் ஒவ்வொரு அடியாக! -ஜோ கிரார்ட்