எல்லா குழந்தைகளுக்குமான தேவை ஒரு சிறிய உதவி மட்டுமே, ஒரு சிறிய நம்பிக்கை மற்றும் அவர்கள் மேல் நம்பிக்கை கொள்ளும் சிலர் -மேஜிக் ஜான்சன்
முயற்சி இல்லாமல் நம்பிக்கை இல்லை. நம் நம்பிக்கைகள் மற்றும் கனவுகளை உணர்ந்து செயல்படத் தயாராகாவிடில் நம்பிக்கைக்கு அர்த்தம் இல்லை -ஆங் சான் சூ கீ
எப்போதும் வலிமையானவர்கள் வெற்றியாளர்களாவதில்லை, தோல்வியிலும் நம்பிக்கையை இழக்காதவர்களே வெற்றியாளர்கள்
மொத்த உலகமும் முடியாது என்று சொல்லும்போது, ‘ஒருவேளை முடியலாம்’ என்று மெல்லியதாக உங்களுக்கு கேட்கும் குரலே நம்பிக்கை
நீங்கள் நம்பும் ஒரு விடயத்திற்க்கான முயற்சியை எப்போதும் கைவிடாதீர்கள். உண்மையான நம்பிக்கையும், பற்றும் கொண்ட ஒரு இலக்கு தவறாக வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன் -எல்லா பிட்ஸ்கெரால்டு
பல நேரங்களில் வெற்றிக்கும் தோல்விக்கும் உள்ள வேறுபாடு பேரார்வமும் நம்பிக்கையும் மட்டுமே. அவைதான் இருண்ட நாட்களில் இருந்து உங்களை காப்பாற்றும்
நம்பிக்கை கொண்டவர்கள் ஒவ்வொரு பிரச்சனையிலும் உள்ள வாய்ப்பையே காண்கிறார்கள், இல்லாதவர்கள் ஒவ்வொரு வாய்ப்பிலும் பிரச்சனைகளையே காண்கின்றனர் -வின்ஸ்டன் சர்ச்சில்
தைரியமாக இருங்கள், ஆபத்துக்களை விட்டு விலகி ஓடாதீர்கள், அவற்றை எதிர்கொள்ளுங்கள். ஏனெனில் அனுபவத்துக்கு மாற்று என்று ஒன்று இல்லவே இல்லை -போலோ கோலிஹோ