நேரம் போய்க்கொண்டேதான் இருக்கும். எனவே நீ செய்யவேண்டியதை செய். அதுவும் இப்போதே செய். காத்திருக்காதே. -ராபர்ட் டி நீரோ
நேரம் உங்கள் வாழ்க்கையின் பணம். அதுதான் உங்களிடம் இருக்கும் ஒரே பணம், அதை எப்படி செலவழிப்பதென்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். நீங்கள் எச்சரிக்கையாக இல்லையென்றால் பிறர் அதை செலவழித்துவிடுவார்கள் -கார்ல் சாண்ட்பர்க்
நீங்கள் உண்மையிலேயே வாழ்க்கையை விரும்புகிறீர்களெனில் நேரத்தை வீணாக்காதீர்கள். நேரங்களால் உருவானதே வாழ்க்கை! -ப்ரூஸ் லீ
இந்த கடிதத்தை நான் சற்று நீளமாக எழுதுகிறேன், ஏனெனில் இதை சுருக்கமாக எழுத எனக்கு நேரமில்லை -பிளைஸ் பாஸ்கல்
உங்களிடம் நீங்கள் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டிய கேள்வி, “நீங்கள் சரியானவற்றுக்கு உங்கள் நேரத்தை செலவிடுகிறீர்களா என்பதே” ஏனெனில், உங்களிடம் இருப்பது நேரம் ஒன்றுதான் -எலன் மஸ்க்