பழக்கங்களை எளிதாக பெற முடியாது. அனுபவத்தின் மூலம் பெறப்படும் சோதனை மற்றும் துன்பங்களின் வழியாகவே ஆன்மாவை வலுவூட்டவும், லட்சியத்தை தூண்டவும், அதன்மூலமே வெற்றியை அடையவும் முடியும். -ஹெலன் கெல்லர்
தினசரி பயிற்சி, அனைத்து ஆரோக்கியமற்ற மனப்பான்மைகளில் இருந்தும் உங்கள் மனதை விடுவிக்கும். -நார்மன் வின்சென்ட் பீலே
நம் அன்றாட பழக்கவழக்கங்கள் சிலவற்றை மாற்றிக் கொள்ளாமல், வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது -மைக் மர்டாக்
நாம் எதை தொடர்ந்து செய்கிறோமோ, அதுவாகவே ஆகிறோம். எனவே, திறமை என்பது ஒரு செயல் அல்ல அது ஒரு பழக்கம் -அரிஸ்டாட்டில்
தன்னம்பிக்கை எப்போதும் நிலைத்திருப்பதில்லை என்கிறார்கள், குளிப்பதுகூட நிலைத்திருப்பதில்லை, அதனால்தான் நாங்கள் அதை தினமும் பரிந்துரைக்கிராம் -ஜிக் ஜிக்லர்
எழுத்துப் பயிற்சி மூலம் கையெழுத்தைத் திருத்துவது போல, உண்மை பேசும் பழக்கமும் பயிற்சியினால்தான் வரும் -ஜான் ரஸ்கின்
உங்கள் தகுதியை உயர்த்திக்கொள்ள தகுதியுள்ள மனிதர்களிடம் பழகுங்கள். தவறான நபருடன் பழகுவதற்க்கு பதில் தனியாக இருப்பதே மேல் -ஜார்ஜ் வாஷிங்டன்
இதுவரையில் சிறந்த கண்டுப்பிடிப்பு எதுவெனில், ஒருவர் தனது பழக்கவழக்கங்களை சிறிதளவு மேம்பாடுத்தினாலே அவருடைய எதிர் காலத்தை மாற்றலாம் என்பது தான்! -ஓப்ரா வின்ப்ரே