முயற்சி இல்லாமல் நம்பிக்கை இல்லை. நம் நம்பிக்கைகள் மற்றும் கனவுகளை உணர்ந்து செயல்படத் தயாராகாவிடில் நம்பிக்கைக்கு அர்த்தம் இல்லை -ஆங் சான் சூ கீ
எப்போதும் மிகச்சிறப்பான முயற்சியையும், உழைப்பையும் கொடுங்கள் இன்று எதை நீங்கள் விதைக்கிறீர்களோ, அதையே நாளை அறுவடை செய்யமுடியும் -ஒக் மேண்டினோ
ஒரு முயற்சி உங்களை பதட்டமடைய்யச் செய்தால், அநேகமாக நீங்கள் அதை சரியாகத்தான் செய்கிறீர்கள் -டொனால்ட் க்ளோவர்
எப்போதாவது முயற்சித்து தோல்வியடைந்திருக்கிறீர்களா? பரவாயில்லை, மறுபடியும் முயற்சியுங்கள், மறுபடியும் தோல்வியடையுங்கள், இன்னும் சிறப்பாக -சாமுவெல் பெக்கெட்
முயற்சியை கைவிடாதீர்கள். நீங்கள் அதிசயத்தை நிகழ்த்தப்போகும் தருணம் இதுவாக இருக்கலாம் -கிரெக் ஆண்டர்சன்
நீங்கள் நம்பும் ஒரு விடயத்திற்க்கான முயற்சியை எப்போதும் கைவிடாதீர்கள். உண்மையான நம்பிக்கையும், பற்றும் கொண்ட ஒரு இலக்கு தவறாக வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன் -எல்லா பிட்ஸ்கெரால்டு
நான் எப்போதும் என்னால் செய்ய முடியாத வேலையை செய்யவே முயல்கிறேன், ஏனெனில் அப்போதுதான் அதை எவ்வாறு செய்வதென்று கற்றுக் கொள்ளமுடியும் -பெப்லொ பிக்காசோ
தோல்வி ஏற்றுக் கொள்ளத்தக்கது, எல்லோரும் ஏதோ ஒன்றில் தோற்கிறார்கள். ஆனால் முயற்சியின்மையை மட்டும் ஏற்றுக் கொள்ள முடியாதது -மைக்கல் ஜோர்டன்
சில விடயங்கள் உங்களுக்கு முக்கியம் எனில், சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இல்லையென்றாலும், அதை நீங்கள் செய்ய வேண்டும். -எலன் மஸ்க்
சோம்பேறி ஒரு செயலை முயற்சிக்கும் முன்பே, சாதனையாளர் பலமுறை தோல்வி அடைந்து விடுகிறார். தோல்வியே வெற்றிக்கு முதல் படி!