உங்கள் வாழ்க்கையின் எந்த சூழலிலும் முடியாதென்று எதுவும் கிடையாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள் -ஆர். மாதவன்
புதிய குறிக்கோளை அமைத்து கொள்ளவும், புதிய கனவுகளை காணவும் எப்போதும் வயது ஒரு தடையில்லை -சி எஸ் லெவிஸ்
வாழ்க்கை என்பது வாய்ப்புகளால் நிரம்பியது, நாம் பயன்படுத்தும் வாய்ப்பை பொறுத்தே நம் வாழ்க்கை அமையும் -ஜான் எப் கென்னடி
வாழ்க்கையின் மகத்துவம் தோற்காமலேயே இருப்பதில் இல்லை, தோற்க்கும் ஒவ்வொரு முறையும் திரும்ப எழுவதில்தான் உள்ளது -நெல்சன்மண்டேலா
வாழ்வில் பலர் தோற்கின்றனர். அதற்கு காரணம், மிகப்பெரிய இலக்குகளில் தோல்வியடைவதல்ல, மிகச்சிறிய இலக்குகளில் வெற்றியடைவதே -லெஸ் பிரவுன்
நேரம் உங்கள் வாழ்க்கையின் பணம். அதுதான் உங்களிடம் இருக்கும் ஒரே பணம், அதை எப்படி செலவழிப்பதென்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். நீங்கள் எச்சரிக்கையாக இல்லையென்றால் பிறர் அதை செலவழித்துவிடுவார்கள் -கார்ல் சாண்ட்பர்க்
நீங்கள் உண்மையிலேயே வாழ்க்கையை விரும்புகிறீர்களெனில் நேரத்தை வீணாக்காதீர்கள். நேரங்களால் உருவானதே வாழ்க்கை! -ப்ரூஸ் லீ