நீங்கள் சிலரை வெல்லலாம், சிலரிடம் தோற்கலாம். ஆனாலும் தொடர்ந்து செல்லுங்கள், உங்களுக்கு நீங்களே சவாலாயிருங்கள், நீங்கள் ஒரு சிறந்த மனிதனாக, நல்ல தனி மனிதனாக, சிறந்த போராளியாக ஆகிவிடுவீர்கள் -கோனார் மெக்ரிகெர்
உங்கள் இலக்குகளை அதிபயங்கர உயரத்தில் வைத்து தோல்வியடைந்தாலும், உங்களின் தோல்வி மற்றவர்களின் வெற்றியைவிட உயரத்தில் இருக்கும். -ஜேம்ஸ் கேமரூன்
வேறெந்த தகுதியையும் விட விடாமுயற்சியே வெற்றிக்கு அவசியம், அது அனைத்தையும் வெல்லும், இயற்கையும் அதற்க்கு விதிவிலக்கல்ல -ஜான் டி ராக்பெல்லர்
வெற்றியாளர்கள் பரிசளிக்கப்பட்டவர்களல்ல, அவர்கள் கடினமாக உழைப்பவர்கள், அதனால் வெற்றியை பரிசாகப் பெற்றவர்கள்
எப்போதும் வலிமையானவர்கள் வெற்றியாளர்களாவதில்லை, தோல்வியிலும் நம்பிக்கையை இழக்காதவர்களே வெற்றியாளர்கள்
உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கைவாழத் தொடங்குவதற்க்கான முதல் அறிகுறி! -சுவாமி விவேகானந்தர்
எவர் ஒருவர் குறிக்கோளுடன் போராடுகிறாரோ அவரே வெற்றி பெறுகிறார், ஏனெனில் தாம் எங்கு செல்கிறோம் என்று அவருக்கு தெரியும்…! -ஏர்ல் நைட்டிங்கேல்
வெற்றி மிக அருகில் உள்ளது என்பதை அறியாமல் முயற்சியை கை விடுவதே வாழ்வில் பல தோல்விகளுக்கு காரணம் -தாமஸ் ஆல்வா எடிசன்
வெற்றி என்பது திடீரென நிகழ்வது அல்ல, வெற்றி என்பது நாம் கற்றுக்கொண்டது, பயிற்சி செய்தது மற்றும் பகிர்ந்து கொண்டது! -ஸ்பார்கி ஆண்டர்சன்
வெற்றி என்பது புத்திசாலிகளின் சொத்தல்ல, அது முன்னேற துடிக்கும் உழைப்பாளிக்கும், தன்னம்பிக்கைக்குமே சொந்தம்! -அடால்ப் ஹிட்லர்