தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது -ஹென்றி ஃபோர்ட்
தொடங்குவதற்கு மிகச் சரியான தருணம் என்று ஒன்று கிடையாது. இப்பொழுதே தொடங்குங்கள். செய்யும் போது தான் கற்றுக் கொள்ள முடியும் -ஜேக் கேன்பீல்ட்
சில விடயங்கள் உங்களுக்கு முக்கியம் எனில், சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இல்லையென்றாலும், அதை நீங்கள் செய்ய வேண்டும். -எலன் மஸ்க்
கனவு காணுங்கள், கனவு காணுங்கள், கனவு காணுங்கள். கனவுதான் சிந்தனையாகவும், சிந்தனைதான் செயலாகவும் மாறுகிறது. -ஆ ப ஜெ அப்துல் கலாம்
எல்லாம் உங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது என்றால், நீங்கள் வேகமாக செயல்படவில்லை என்று அர்த்தம்! -மரியோ அன்ரட்டி
ஒரு செயலை செய்ய முடியாமல் போனதற்கான காரணங்களை தேடாதீர்கள், அதை எப்படியாவது செய்து முடிப்பதற்கான முயற்சிகளில் கவனம் செலுத்துங்கள்! -ரால்ப் மார்ஸ்டன்