முயற்சியை கைவிடாதீர்கள். நீங்கள் அதிசயத்தை நிகழ்த்தப்போகும் தருணம் இதுவாக இருக்கலாம் -கிரெக் ஆண்டர்சன்
நீங்கள் நம்பும் ஒரு விடயத்திற்க்கான முயற்சியை எப்போதும் கைவிடாதீர்கள். உண்மையான நம்பிக்கையும், பற்றும் கொண்ட ஒரு இலக்கு தவறாக வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன் -எல்லா பிட்ஸ்கெரால்டு
நான் எப்போதும் என்னால் செய்ய முடியாத வேலையை செய்யவே முயல்கிறேன், ஏனெனில் அப்போதுதான் அதை எவ்வாறு செய்வதென்று கற்றுக் கொள்ளமுடியும் -பெப்லொ பிக்காசோ
தோல்வி ஏற்றுக் கொள்ளத்தக்கது, எல்லோரும் ஏதோ ஒன்றில் தோற்கிறார்கள். ஆனால் முயற்சியின்மையை மட்டும் ஏற்றுக் கொள்ள முடியாதது -மைக்கல் ஜோர்டன்
சோம்பேறி ஒரு செயலை முயற்சிக்கும் முன்பே, சாதனையாளர் பலமுறை தோல்வி அடைந்து விடுகிறார். தோல்வியே வெற்றிக்கு முதல் படி!
கரையில் நின்று வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கும் ஒருவனால், கடலை கடக்கவே முடியாது. -இரவீந்திரநாத் தாகூர்
காத்திருப்பவர்களுக்கு நல்லவை கிடைக்கின்றன. ஆனால் வெளியில் வந்து முயற்சிப்பவர்க்கே மிகச்சிறந்தவை கிடைக்கின்றன.
கடந்து வந்த ஆயிரம் ஏமாற்றங்கள், நீங்கள் செய்யும் ஒரு புதிய முயற்சிக்கு ஈடாகாது. முன்னேறுங்கள். வெற்றி பெறுங்கள்.
எந்த பெரிய அடியும் வெற்றியை தீர்மானிப்பதில்லை. நிறைய சிறு சிறு அடிகளே வெற்றியை தீர்மானிக்கின்றன. -பீட்டர் எ கோஹென்
உங்களால் எதுவும் முடியும், ஆனால் எல்லாம் முடியாது. எனவே முக்கியமானவற்றுக்கு முன்னுரிமை கொடுங்கள் -ஆ ப ஜெ அப்துல் கலாம்