விடுதலை உணர்வின் மிகவும் திருப்திகரமான வடிவம் பொறுப்புகளே இல்லாத வாழ்க்கை அல்ல, மாறாக உங்கள் பொறுப்புகளை நீங்களே தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பிருக்கும் வாழ்க்கையே ஆகும். -ஜேம்ஸ் க்ளியர்
புதிய குறிக்கோளை அமைத்து கொள்ளவும், புதிய கனவுகளை காணவும் எப்போதும் வயது ஒரு தடையில்லை -சி எஸ் லெவிஸ்
வாழ்க்கை என்பது வாய்ப்புகளால் நிரம்பியது, நாம் பயன்படுத்தும் வாய்ப்பை பொறுத்தே நம் வாழ்க்கை அமையும் -ஜான் எப் கென்னடி
வாழ்க்கையின் மகத்துவம் தோற்காமலேயே இருப்பதில் இல்லை, தோற்க்கும் ஒவ்வொரு முறையும் திரும்ப எழுவதில்தான் உள்ளது -நெல்சன்மண்டேலா
வாழ்வில் பலர் தோற்கின்றனர். அதற்கு காரணம், மிகப்பெரிய இலக்குகளில் தோல்வியடைவதல்ல, மிகச்சிறிய இலக்குகளில் வெற்றியடைவதே -லெஸ் பிரவுன்
நீங்கள் உண்மையிலேயே வாழ்க்கையை விரும்புகிறீர்களெனில் நேரத்தை வீணாக்காதீர்கள். நேரங்களால் உருவானதே வாழ்க்கை! -ப்ரூஸ் லீ
செய்ததையே திரும்ப திரும்ப செய்து கொண்டு வாழ்வில் மாற்றங்களை எதிர்பார்ப்பது பைத்தியக்காரத்தனம் -ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
கீழே விழுவதும் பின்பு மேலே எழுவதும் நம் வாழ்க்கைப் பயணத்தில் மிக முக்கியமானது, நம் இதயதுடிப்பை அளவிடும் கருவிக்கூட ஒரே நேர்கோட்டை காட்டினால் நாம் பிணம் என்றே பொருள். -ரத்தன் டாடா