வாழ்க்கை என்பது வாய்ப்புகளால் நிரம்பியது, நாம் பயன்படுத்தும் வாய்ப்பை பொறுத்தே நம் வாழ்க்கை அமையும் -ஜான் எப் கென்னடி
நீங்கள் தேடவேண்டியது வாய்ப்பை, பாதுகாப்பை அல்ல. கரையில் நிற்கும் ஒரு படகு பாதுகாப்பானதுதான், ஆனால் அது ஒருநாள் அதன் அடித்தளத்தையே அரித்துவிடும் -ஹெச் ஜாக்சன் பிரவுன் ஜூனியர்
நம்பிக்கை கொண்டவர்கள் ஒவ்வொரு பிரச்சனையிலும் உள்ள வாய்ப்பையே காண்கிறார்கள், இல்லாதவர்கள் ஒவ்வொரு வாய்ப்பிலும் பிரச்சனைகளையே காண்கின்றனர் -வின்ஸ்டன் சர்ச்சில்
ஒவ்வொரு நொடியும் உங்கள் வாழ்வை மாற்றுவதற்கான வாய்ப்பே. ஏனெனில் எந்த கணம் வேண்டுமானாலும் நீங்கள் உங்கள் எண்ணங்களை மாற்றி கொள்ள இயலும்! -ரோண்டோ பைரின்
ஒரு கதவு மூடப்படும்போது இன்னொரு கதவு திறக்கிறது. ஆனால் பல நேரங்களில் நாம் மூடிய கதவின் நினைவிலேயே இருப்பதால், திறந்த கதவுகள் நம் கண்களுக்கு புலப்படுவதில்லை -அலெக்சாண்டர் க்ரஹம் பெல்