நேரம் உங்கள் வாழ்க்கையின் பணம். அதுதான் உங்களிடம் இருக்கும் ஒரே பணம், அதை எப்படி செலவழிப்பதென்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். நீங்கள் எச்சரிக்கையாக இல்லையென்றால் பிறர் அதை செலவழித்துவிடுவார்கள் -கார்ல் சாண்ட்பர்க்
நீங்கள் உண்மையிலேயே வாழ்க்கையை விரும்புகிறீர்களெனில் நேரத்தை வீணாக்காதீர்கள். நேரங்களால் உருவானதே வாழ்க்கை! -ப்ரூஸ் லீ
சரியான தருணத்திற்காக காத்திருக்காதீர்கள், கிடைக்கின்ற தருணத்தை சரியாக பயன்படுத்த கற்றுக் கொள்ளுங்கள்!
ஓட்டப் பந்தயத்திற்கு ஆயத்தமாக நிற்பவர்களிலே எவனாவது “இது நல்ல காலந்தானா!” என்று சிந்திப்பானா? பந்தயத்தொடக்கத்திற்கான மணியொலி எப்போது காதில் விழும் என்றல்லவா காத்திருப்பான்?
உங்கள் மனதில் வைத்துக் கொள்ளுங்கள், வருடத்தின் எல்லா நாட்களும் சிறப்பான நாட்களே! -ரால்ப் வால்டோ எமெர்சன்
இந்த கடிதத்தை நான் சற்று நீளமாக எழுதுகிறேன், ஏனெனில் இதை சுருக்கமாக எழுத எனக்கு நேரமில்லை -பிளைஸ் பாஸ்கல்
உங்களிடம் நீங்கள் கேட்டுக்கொண்டே இருக்கவேண்டிய கேள்வி, “நீங்கள் சரியானவற்றுக்கு உங்கள் நேரத்தை செலவிடுகிறீர்களா என்பதே” ஏனெனில், உங்களிடம் இருப்பது நேரம் ஒன்றுதான் -எலன் மஸ்க்