எவனொருவன் தானே சரணடையாமல், மற்றவர்களின் இச்சைப்படி செயல்படாமல், எதனையும் சோதனைக்குட்படுத்தி அறிவு வெளிச்சத்தில் அலசி ஏற்கின்றானோ அவனே சுதந்திர மனிதன்.
அம்பேத்கர்மற்றவர்களுக்கெல்லாம் எதிரி ஏகாதிபத்தியம். ஆனால், தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களைச் சுற்றிப் பல்வேறு எதிரிகளால் சூழப்பட்டுள்ளதால், எல்லோரையும் ஒரே நேரத்தில் எதிர்க்க முடியாது; எனவே, 2,000 ஆண்டுகளாக உயர் சாதி இந்துக்களால் இழைக்கப்படும் கொடுமைகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிராகப் போரிடுவது என முடிவெடுத்தேன்.
அம்பேத்கர்பிறப்பால் மக்களை உயர்ந்தவர், தாழ்ந்தவர் என பிராமணீயம் பிரித்தது; மாறாக, பல்வேறு பிரிவினரையும் உள்ளடக்கியதோர் சமுதாயத்தைக் கட்டுவதற்காக வாழ்நாள் முழுவதும் அயராது பாடுபட்டவர் புத்தர். எனவே, புத்தரை எனது வாழ்நாள் வழிகாட்டியாகத் தேர்ந்தெடுத்தேன்.
அம்பேத்கர்ஆங்கிலேயர் வருவதற்கு முன்னர் எப்படி இருந்தார்களோ அப்படியேதான் ஒடுக்கப்பட்டவர்கள் இருக்கின்றனர்… அவர்களும் குடிமக்கள்தான்; ஆனால், குடிமக்களுக்குரிய உரிமைகள் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. அவர்கள் கட்டிய வரியிலிருந்து பள்ளிகள் நடத்தப்பட்டன. ஆனால், அவர்களுடைய குழந்தைகளை அந்தப் பள்ளியில் அனுமதிக்கவில்லை. அவர்கள் கட்டிய வரிப் பணத்திலிருந்து கிணறுகள் வெட்டப்பட்டன. ஆனால், அவர்கள் அந்தக் கிணற்றிலிருந்து குடிதண்ணீர் எடுக்க முடியாது.
அம்பேத்கர்இந்தியப் புரட்சியின் இரு பெரும் தடைகள் பார்ப்பனீயமும் முதலாளியமும்தான்.
அம்பேத்கர்இந்து சமுதாயம் சமத்துவத்தின் அடிப்படையில் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்றால் ஜாதி அமைப்பு அகற்றப்பட வேண்டும் என்பதை சொல்லத் தேவையில்லை. தீண்டாமையின் வேர்கள் சாதி அமைப்பின் வேரிலேயே உள்ளது. பிராமணர்கள் சாதி அமைப்புக்கு எதிராக எழுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. மேலும் நாம் ப்ராமணரல்லாதவர்களை நம்பி நமது போரை அவர்களிடம் ஒப்படைக்கவும் முடியாது.
அம்பேத்கர்நான் யாருக்கும் அடிமையில்லை, எனக்கு யாரும் அடிமையில்லை.
அம்பேத்கர்ஆண்மை என்ற சொல்லை அழிக்காமல் பெண்களுக்கு விடுதலை இல்லை, மதம் என்ற கைவிலங்கை உடைக்காமல் மக்களுக்கு விடுதலை இல்லை.
அம்பேத்கர்முதன்மையான மற்றும் மிகச்சிறந்த சமூக சீர்திருத்தவாதி கவுதம புத்தர். அவரோடு தான் சமூக சீர்திருத்த வரலாறு துவங்குகிறது. அவரின் அளப்பரிய சாதனைகளை விலக்கிவிட்டு சமூக சீர்திருத்த வரலாறு எழுதப்படும் என்றால் அது முழுமையானது இல்லை.
அம்பேத்கர்எனக்குத் தாயகம் உண்டு என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், நான் மீண்டும் கூற விரும்புகிறேன், எனக்கு அது இல்லை, நாய்கள், பூனைகளைவிட நாங்கள் மோசமாக நடத்தப்பட்டால், குடிதண்ணீர் பெறவும் உரிமை இல்லை என்றால் சுயமரியாதையுள்ள எந்த தீண்டப்படாதவன் இந்த நாட்டைத் தன் நாடாகக் கருதுவான்? இந்த நாடு எங்களுக்கு அளித்த உதவி, இன்னல்களையும் அநீதிகளையும் மலைபோல் எங்கள் மீது சுமத்தியதே ஆகும். யுகயுகமாகக் காலால் மிதித்து நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட என் மக்களின் உரிமைகளுக்காக நான் செய்யும் முயற்சிகளின் காரணமாக இந்த நாட்டுக்கு எவ்விதத் தீங்கும் நேர்ந்துவிடாது.
அம்பேத்கர்ஓர் அடிமைக்கு அவன் அடிமை என்பதை முதலில் உணர்த்து. பிறகு, அவன் தானாகவே கிளர்ந்து எழுவான்.
அம்பேத்கர்