ரொட்டிக்கான பசியை விட அன்பின் பசியை அகற்றுவது மிகவும் கடினம்.
அன்னை தெரசாசிலர் நன்றாக வாழ்வதற்கு ஒரு காரணம் இருக்க வேண்டும். அதற்காக அவர்கள் உழைத்திருக்ககூடும். ஆனால், ஒருவருக்கு பயன்படக்கூடிய பொருட்களை மக்கள் தூக்கி எறிந்து வீணாக்குவதை பார்க்கும்போதுதான் எனக்கு கோபம் வருகிறது.
அன்னை தெரசாநம் சேவை கடலில் ஒரு துளி என்று நாமே உணர்கிறோம். ஆனாலும் அந்த துளி இல்லாமல் கடலில் தண்ணீர் இன்னும் குறைவாகவே இருக்கும்.
அன்னை தெரசாநீங்கள் செல்லுமிடமெல்லாம் அன்பை பரப்புங்கள். உங்களிடம் வந்தவர்கள் யாரும் வருத்தத்துடன் திரும்பாமல் இருக்கட்டும்.
அன்னை தெரசாஅன்பு என்பது அனைத்து பருவங்களிலும் கைக்கெட்டும் தூரத்தில் கிடைக்கக்கூடிய ஒரு பழம்
அன்னை தெரசாவறுமை என்பதுஉண்ண உணவின்றி, உடுத்த துணியின்றி, வசிக்க வீடின்றி இருப்பது மட்டுமே என்று சில நேரங்களில் நாம் நினைக்கிறோம். யாருக்கும் தேவைப்படாமல், யாராலும் விரும்பப்படாமல், யாராலும் கவனிக்கப்படாமல் இருப்பதே வறுமையிலும் மிகப்பெரிய வறுமை.
அன்னை தெரசா