ஊக்குவிக்க ஆளிருந்தால் ஊக்கு விற்கும் ஆள் கூடத் தேக்கு விற்பான்!
வாலிஎதை விதைத்தோமோ அதைத்தான் அறுவடை செய்கிறோம். நமது விதியை நாமே வகுத்துக்கொள்கிறோம். எனவே, யாரையும் தூற்றுவதற்கும் ஒருவருமில்லை; பாராட்டுவதற்கும் ஒருவருமில்லை. காற்று வீசியபடி இருக்கிறது. பாய்மரங்களை விரித்துக் காற்றை பயன்படுத்திக்கொள்ளும் கப்பல்கள் தங்கள் வழியே முன்னேறிச் செல்கின்றன. ஆனால் பாய்களை சுருட்டி வைத்துள்ள கப்பல்கள் காற்றை ஏற்றுப் பயன் பெறுவதில்லை. இது காற்றினுடைய குற்றமாகுமா?
சுவாமி விவேகானந்தர்நீங்கள் ஒரு பூவை நேசித்தால், அதை பறிக்க வேண்டாம், ஏனெனில் நீங்கள் அதை பறித்தால், அது இறந்துவிடும், உங்களுக்கு அதன் மீதான ஆசையும் முடிந்துவிடும். எனவே நீங்கள் ஒரு பூவை நேசித்தால், அதை அப்படியே விட்டுவிடுங்கள். அன்பு என்பது உடைமையாக்கிகொள்வது பற்றியது அல்ல, அன்பு என்பது அப்படியே ஏற்றுக்கொள்வது.
ஓஷோ