எல்லாரையும் போல நீங்களும் பிரச்சனைகளைத் தவிர்க்கத்தான் போகிறீர்கள் என்றால் இந்தப் பூமியில் நீங்கள் இருந்து என்ன பயன்?
அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர்நாம் நம்முடன் இருக்கும் நபர்களிடம் அன்பு செலுத்த முடியாமல் போனால் நம்மால் பார்க்க முடியாத கடவுளிடம் எப்படி அன்பு செலுத்த முடியும்?
அன்னை தெரசாவறுமை என்பதுஉண்ண உணவின்றி, உடுத்த துணியின்றி, வசிக்க வீடின்றி இருப்பது மட்டுமே என்று சில நேரங்களில் நாம் நினைக்கிறோம். யாருக்கும் தேவைப்படாமல், யாராலும் விரும்பப்படாமல், யாராலும் கவனிக்கப்படாமல் இருப்பதே வறுமையிலும் மிகப்பெரிய வறுமை.
அன்னை தெரசாரொட்டிக்கான பசியை விட அன்பின் பசியை அகற்றுவது மிகவும் கடினம்.
அன்னை தெரசாபணம் மட்டும் கொடுத்து திருப்தி அடைய வேண்டாம். பணம் மட்டும் போதாது, அவர்கள் நேசிக்கப்பட உங்கள் இதயம் அவர்களுக்கு தேவை. எனவே, நீங்கள் செல்லும் இடமெல்லாம் உங்கள் அன்பைப் பரப்புங்கள்.
அன்னை தெரசாபணக்காரர்கள் கூட அன்பிற்காகவும், கவனிப்பதற்காகவும், விரும்பப்படுவதற்காகவும், சொந்தம் என்று அழைக்கப்படுபவதற்கும் ஏக்கத்துடன் காத்திருக்கிறார்கள்.
அன்னை தெரசா