இந்து சமுதாயம் சமத்துவத்தின் அடிப்படையில் மறுசீரமைக்கப்பட வேண்டும் என்றால் ஜாதி அமைப்பு அகற்றப்பட வேண்டும் என்பதை சொல்லத் தேவையில்லை. தீண்டாமையின் வேர்கள் சாதி அமைப்பின் வேரிலேயே உள்ளது. பிராமணர்கள் சாதி அமைப்புக்கு எதிராக எழுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. மேலும் நாம் ப்ராமணரல்லாதவர்களை நம்பி நமது போரை அவர்களிடம் ஒப்படைக்கவும் முடியாது.
அம்பேத்கர்தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளை உள்ளடக்கியதாக இந்திய தேசியம் இல்லை. எனவே, தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகளை தேசியத்துக்காகத் தியாகம் செய்ய முடியாது.
அம்பேத்கர்மற்றவர்களுக்கெல்லாம் எதிரி ஏகாதிபத்தியம். ஆனால், தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களைச் சுற்றிப் பல்வேறு எதிரிகளால் சூழப்பட்டுள்ளதால், எல்லோரையும் ஒரே நேரத்தில் எதிர்க்க முடியாது; எனவே, 2,000 ஆண்டுகளாக உயர் சாதி இந்துக்களால் இழைக்கப்படும் கொடுமைகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிராகப் போரிடுவது என முடிவெடுத்தேன்.
அம்பேத்கர்பிறப்பால் மக்களை உயர்ந்தவர், தாழ்ந்தவர் என பிராமணீயம் பிரித்தது; மாறாக, பல்வேறு பிரிவினரையும் உள்ளடக்கியதோர் சமுதாயத்தைக் கட்டுவதற்காக வாழ்நாள் முழுவதும் அயராது பாடுபட்டவர் புத்தர். எனவே, புத்தரை எனது வாழ்நாள் வழிகாட்டியாகத் தேர்ந்தெடுத்தேன்.
அம்பேத்கர்சாதிகள் இல்லையடி பாப்பா குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்.
சுப்ரமணிய பாரதிஜாதிகள் இந்த நாட்டிலிருந்து ஒழிக்கப்படும் வரை இட ஒதுக்கீடு அரசாங்க அலுவலகங்களில் நிரந்தரமாக இருந்து வர வேண்டும்.
பெரியார்சாதி பேதம் ஒழிவதாலும், மேல் சாதி-கீழ் சாதி ஒழிவதாலும், ஒழிய வேண்டும் என்று கேட்பதாலும் ஒரு தேசியம் கெட்டுப் போகுமானால், சுயராச்சியம் வருவது தடைப்பட்டு போகுமானால் அப்படிப்பட்ட தேசியமும் சுயராச்சியமும் ஒழிந்து நாசமாய்ப் போவது மேல்.
பெரியார்