தைரியத்தின் அடிப்படையிலேயே ஏறக்குறைய ஒரு முரண்பாடு உள்ளது. அது, வாழ்வதற்கான ஒரு வலுவான ஆவல் சாவதற்கும் துணிவதிலேயே உள்ளது.
ஜி கே செஸ்டர்டன்நான் இறந்த பிறகு, ஒரு கறுப்பர் இன மனிதனாக, நான் வென்ற சாம்பியன் பட்டங்களாலும், எந்நேரமும் மக்களை மகிழ்வித்த ஒரு சக உயிராகவும், தன் மக்களுடைய சுதந்திரத்துக்காக, சமூக நீதிக்காக, அவர்களுடைய சம உரிமைக்காப் போராடிய மனிதனாகவும்தான் நினைவுகூரப்பட விரும்புகிறேன்.
முகம்மது அலிஇன்று முதல், நீங்கள் சந்திக்கும் அனைவரையும் நள்ளிரவில் இறந்துவிடப் போவது போல் நடத்துங்கள். நீங்கள் சேகரிக்கக்கூடிய அனைத்து கவனிப்பு, கருணை மற்றும் புரிதலை அவர்களுக்கு கொடுங்கள், மேலும் எந்த பலனையும் நினைக்காமல் அதைச் செய்யுங்கள். உங்கள் வாழ்க்கை மொத்தமாக மாறும்.
ஓக் மண்டினோநான் இறந்த பிறகு எனது உடலை எரியூட்ட வேண்டும். எந்த விதமான மதச்சடங்குகளும் செய்யக் கூடாது. அவற்றில் எனக்கு நம்பிக்கையும் உடன்பாடும் இல்லை. கொஞ்சம் சாம்பலை எடுத்து கங்கையிலே கரையுங்கள். கங்கையில் கரைக்கச் சொல்வது மத நம்பிக்கையினால் அல்ல. கங்கை நான் நேசித்த ஜீவநதி. அதனோடு சங்கமிக்க விரும்புகிறேன். மிச்சமிருக்கிற சாம்பலை இந்தியாவின் வயல்கள் எங்கும் தூவுங்கள். உழவர்கள் உழுது தானியங்களை விளைவிக்கும் அந்த மண்ணோடு மண்ணாக, இந்தியத் திருநாட்டின் காற்றோடு காற்றாகக் கலந்து கிடக்க விரும்புகிறேன்.
ஜவஹர்லால் நேருபலமே வாழ்வு; பலவீனமே மரணம்
சுவாமி விவேகானந்தர்வாழ்வும் சாவும், நன்மையும் தீமையும், அறிவும் அறியாமையும் ஆன கலவைதான் மாயை, அதாவது பிரபஞ்சத்தின் இயல்பு. இந்த மாயையில் நீ எல்லையற்ற மகிழ்ச்சிக்காக அலையலாம், ஆனால் நீ தீமையையும் காண்பாய். தீமையின்றி நன்மை இருக்குமென்பது சிறுபிள்ளைதனம்.
சுவாமி விவேகானந்தர்