உங்கள் எதிரிகளை எப்பொழுதும் மன்னியுங்கள். ஏனெனில் உங்கள் விரோதம், உங்கள் எதிரிகளை எப்போதும் வருத்துவதில்லை.
சோகம் என்னவென்றால், துரோகம் உங்கள் எதிரிகளிடமிருந்து ஒருபோதும் வருவதில்லை என்பதே.
ஒரு முட்டாள் தன் நண்பர்களை பயன்படுத்துவதைவிட ஒரு அறிவாளி தன் எதிரிகளை நன்றாக பயன்படுத்திகாள்கிறான்.
எதிரிகள் தாக்கித் தாக்கி தங்கள் வலுவை இழக்கட்டும், நீங்கள் தாங்கித் தாங்கி வலுவைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
மதுதான் மனிதனின் மிக மோசமான எதிரி, ஆனால் உன் எதிரியிடமும் அன்பு செலுத்து என்கிறது பைபிள் ☻.
உச்சகட்ட போர்க்கலை என்பது, சண்டையே இல்லாமல் எதிரியை அடிபணியச் செய்வது.
நண்பர்கள் இல்லாதது வருத்தப்பட வேண்டிய ஒன்றுதான், ஆனால் எதிரிகளே அதைவிட மோசம்.