பெற்ற சுதந்திரம் பேணி பாதுகாக்கப்பட நாம் அனைவரும் சாதி, மத, இன பேதங்கள் கடந்து ஒன்றுபட்டு பாடுபட வேண்டும் என்பதை நமக்கு இந்த சுதந்திர திருநாள் உணர்த்திக் கொண்டிருக்கிறது. இந்த உணர்வோடு தமிழக மக்கள் அனைவருக்கும் தமது இதயம் கனிந்த சுதந்திர திருநாள் நல்வாழ்த்துக்கள்.
மு. கருணாநிதிஇந்தியா இந்துக்களின் நாடு மட்டுமல்ல. இது முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகளின் என அனைவருக்குமான நாடு.
மதன் மோகன் மாளவியாஎனது நாட்டுப்பற்று எனது நாட்டுக்கு மட்டுமே உரித்தானதல்ல. அது பிற நாடுகளுக்கான மதிப்பையும் உள்ளடக்கியது. பிற தேசியங்கள் துன்பத்துக்குள்ளாகவும், ஒடுக்கப்படவும் என் தேசபக்தி பயன்படுமானால் அதை நான் நிராகரிக்கிறேன்.
மகாத்மா காந்திசாதிகள் இல்லையடி பாப்பா குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்.
சுப்ரமணிய பாரதிஒரு ஆண் தன் வீட்டு பெண்களையே சமமாக நினைப்பதில்லை. தன் மகனுக்கும் மகளுக்குமே சம உரிமை இல்லை. தன் குடும்பத்திலிருக்கும் அடக்குமுறையை, அதிகாரத்தை, ஆண்/பெண் வேறுபாட்டை, முதலாளித்துவ/நிலவுடைமை பண்பை அழித்து சாதி ஒழிப்பை தொடங்குங்கள். இத்தகைய பண்புகளை மார்க்சிடமிருந்தும், அம்பேத்கரிடமிருந்தும் கற்றுக்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. சாதியின் வடிவம் வேறு வேறாக இருப்பதை கண்டறிந்து, அந்த வடிவம் குடும்பமாக இருப்பதை ஒத்துக்கொண்டு, அந்த குடும்பத்தை சீர்படுத்தும் வேலையை நாம் இன்றிலிருந்து தொடங்குவோம்.
பா ரஞ்சித்நம் நாட்டுக்கு சுதந்திரம் தேவை, ஆனால் பிறர் சுரண்டபடுவதின் மூலம் அது நமக்கு கிடைக்க தேவையில்லை.
ஜவஹர்லால் நேருஇங்கு உயர்ந்தோர் தாழ்ந்தோர் யாருமில்லை அனைவரும் சமமும் இல்லை ஒவ்வொருவரும் தனித்தன்மையுடைய ஒப்பீடற்றவர்கள் நீங்கள் நீங்கள்தான், நான் நான்தான்.
ஓஷோபார்ப்பனர்கள் மனிதர்களாக இருக்கட்டும்; தேவர்களாக இருக்க வேண்டாம் என்றுதான் நாங்கள் கூறுகிறோம்.
பெரியார்ஏழைச் சிறுவன் கல்வியை நாடி வர முடியாவிட்டால் கல்விதான் அவனை நாடிப் போக வேண்டும்.
சுவாமி விவேகானந்தர்