பிறப்பால் மக்களை உயர்ந்தவர், தாழ்ந்தவர் என பிராமணீயம் பிரித்தது; மாறாக, பல்வேறு பிரிவினரையும் உள்ளடக்கியதோர் சமுதாயத்தைக் கட்டுவதற்காக வாழ்நாள் முழுவதும் அயராது பாடுபட்டவர் புத்தர். எனவே, புத்தரை எனது வாழ்நாள் வழிகாட்டியாகத் தேர்ந்தெடுத்தேன்.
அம்பேத்கர்ஒவ்வொரு அநீதியையும் கண்டு ஆத்திரத்தில் அதிர்ந்துபோவாயானால், நீயும் எனது தோழனே.
சேகுவேராதங்கள் சொந்தக் குழந்தைகளைக் கொன்று, தோலின் நிறத்தைக் காரணம் காட்டி தினமும் பாகுபாடு காட்டுபவர்கள்; கறுப்பர்களைக் கொன்றவர்களை பாதுகாத்து, சுதந்திரமாக இருக்க அனுமதிப்பவர்கள், சுதந்திர மனிதர்களாக இருப்பதற்காக நியாயமான உரிமைகளைக் கோரும் கறுப்பின மக்களைத் தண்டிப்பவர்கள், எப்படி தங்களை சுதந்திரத்தின் பாதுகாவலர்களாக கருதிக் கொள்ள முடியும்?
சேகுவேராஎப்போதும், உலகின் எந்தப் பகுதியிலும் எந்தவொரு நபருக்கும் நடக்கும் அநீதியை ஆழமாக உணர முயலுங்கள். அது ஒரு புரட்சியாளரின் மிக அழகான குணம்.
சேகுவேரா