ஒரு மொழியோ, வடிவமோ எவ்வளவு பழையது, தெய்வீகத் தன்மை கொண்டது என்று சொல்லிக் கொள்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு அவற்றைச் சீர்திருத்த வேண்டியது அவசியம்.
மொழி என்பது ஒருவருக்கொருவர் தம் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள உபயோகப் படுத்தும் சாதனமே தவிர அதற்கெனத் தனி மதிப்பு ஒன்றும் கிடையாது.
ஆதி மொழியாக இருக்கலாம்; கடவுள் பேசிய மொழியாக இருக்கலாம்; அநேக அருள்வாக்கு கொண்ட மொழியாக இருக்கலாம். அது வேறு விசயம். அறிவுக்குப் பயன் உண்டா என்பதற்குப் பதில் வேண்டும்.