இனம், மதம், பாரம்பரியம், தேசியம் ஆகிய அனைத்து பெருமைகளுமே, நமக்கு அறிமுகமே இல்லாத மனிதர்களை வெறுப்பதற்கே கற்றுக்கொடுக்கின்றன.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்எனக்குத் தாயகம் உண்டு என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், நான் மீண்டும் கூற விரும்புகிறேன், எனக்கு அது இல்லை, நாய்கள், பூனைகளைவிட நாங்கள் மோசமாக நடத்தப்பட்டால், குடிதண்ணீர் பெறவும் உரிமை இல்லை என்றால் சுயமரியாதையுள்ள எந்த தீண்டப்படாதவன் இந்த நாட்டைத் தன் நாடாகக் கருதுவான்? இந்த நாடு எங்களுக்கு அளித்த உதவி, இன்னல்களையும் அநீதிகளையும் மலைபோல் எங்கள் மீது சுமத்தியதே ஆகும். யுகயுகமாகக் காலால் மிதித்து நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட என் மக்களின் உரிமைகளுக்காக நான் செய்யும் முயற்சிகளின் காரணமாக இந்த நாட்டுக்கு எவ்விதத் தீங்கும் நேர்ந்துவிடாது.
அம்பேத்கர்நீர்த்துப் போகாத தேசியம், முழுமையான சுதந்திரம், இவற்றின் அடிப்படையில்தான் நாம் வேறுபாடுகளை தாண்டி உயர முடியும்.
சுபாஷ் சந்திர போஸ்வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ? - என்றும் ஆரமுது உண்ணுதற்கு ஆசைகொண்டார் கள்ளில் அறிவைச் செலுத்து வாரோ?
சுப்ரமணிய பாரதிதண்ணீர் விட்டோ வளர்த்தோம்? சர்வேசா! இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம்.
சுப்ரமணிய பாரதிஎன்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்? என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?
சுப்ரமணிய பாரதிசுதந்திர தேவி! நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே
சுப்ரமணிய பாரதி