சாதி பேதம் ஒழிவதாலும், மேல் சாதி-கீழ் சாதி ஒழிவதாலும், ஒழிய வேண்டும் என்று கேட்பதாலும் ஒரு தேசியம் கெட்டுப் போகுமானால், சுயராச்சியம் வருவது தடைப்பட்டு போகுமானால் அப்படிப்பட்ட தேசியமும் சுயராச்சியமும் ஒழிந்து நாசமாய்ப் போவது மேல்.