இன்று உங்களுக்கு அதிகாரம் இல்லை, என்றாவது ஒரு நாள் அதிகாரம் வரும். சட்டசபைகளை நிர்வகிப்பதற்கு ஏற்றவாறு இந்தியர்கள் தங்களை தகுதிப்படுத்தி கொள்ளவேண்டும்.
சார்லஸ் எட்வர்ட் ட்ரெவெல்யன்எந்த எளிய மனிதர்களிடமிருந்து இந்த அதிகாரங்கள் நமக்கு கிடைத்ததோ, அந்த எளிய மனிதர்களுக்கே இந்த அதிகாரத்தின் பலனை செலுத்துங்கள். நமது நாட்டை பிடித்திருக்கும் லஞ்சத்திலிருந்து இந்த மக்களை மீட்டெடுப்போம் என உறுதி ஏற்றுக்கொள்ளுங்கள்.
சகாயம்உண்மையான மகிழ்ச்சி என்பது ஒருவரின் ஆற்றல் மற்றும் திறமைகளை முழுமையாகப் பயன்படுத்தும் வாய்ப்பே.
ஜான் டபிள்யூ. கார்ட்னர்சுதந்திரம் கொடுக்கப்படவில்லை, எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஜவஹர்லால் நேருசுதந்திரமும் அதிகாரமும், பொறுப்பையும் சேர்த்தே கொண்டது.
ஜவஹர்லால் நேருஇவனை நம்பு, அவனை நம்பு என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால் நான் சொல்கிறேன், முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை. அது தான் வழி. உன்னிடத்தில் நீ நம்பிக்கை வை, எல்லா ஆற்றல்களும் உன்னுள்ளேயே உள்ளன. அதை உணர்ந்து அந்த ஆற்றலை வெளிப்படுத்து. 'நான் எதையும் சாதிக்க வல்லவன்' என்று சொல். நீ உறுதியுடன் விஷத்தை பொருட்படுத்தாதிருந்தால், பாம்பின் விஷமும் உன் முன் சக்தியற்றதே.
சுவாமி விவேகானந்தர்நாம் இன்று இப்படி இருப்பதற்கு நாமே பொறுப்பு. இனி எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அப்படி நம்மை நாமே மாற்றிக் கொளும் ஆற்றலும் நம்மிடம் உள்ளது!
சுவாமி விவேகானந்தர்எந்த ஒரு சக்தியையும் புதிதாக உண்டாக்க முடியாது. ஏற்கனவே உள்ள சக்தியைத்தான் வேறு திசைக்கு திருப்ப முடியும். எனவே, நமது கைகளில் ஏற்கனவே உள்ள மாபெரும் ஆற்றல்களை அடக்கி ஆள நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அவற்றை மனதின் வலிமையைக் கொண்டு வெறும் மிருக சக்தியாக இருப்பதற்கு பதிலாக, ஆன்மிகச் சக்தியாக இருக்கச் செய். பிரம்மச்சரியம்தான் எல்லா ஒழுக்கங்களுக்கும், எல்லா மதங்களுக்கும் அடித்தளமாக விளங்குகிறது என்பது இதனின்று தெளிவாகிறது.
சுவாமி விவேகானந்தர்நாம் இப்போது இருக்கும் நிலைமைக்கு நாமே பொறுப்பாளிகள். நாம் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அப்படி நம்மை அமைத்துக்கொள்ளும் ஆற்றல் நம்மிடமே இருக்கிறது. நாம் இப்போது இருக்கும் நிலை நம்முடைய முன்வினைகளின் பலன் என்றால், எதிர்காலத்தில் நாம் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அதை நாம் நமது தற்போதைய செயல்களால் உண்டாக்கிக் கொள்ள முடியும் என்பது வெளிப்படை.
சுவாமி விவேகானந்தர்