தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளை உள்ளடக்கியதாக இந்திய தேசியம் இல்லை. எனவே, தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகளை தேசியத்துக்காகத் தியாகம் செய்ய முடியாது.
அம்பேத்கர்ஆங்கிலேயர் வருவதற்கு முன்னர் எப்படி இருந்தார்களோ அப்படியேதான் ஒடுக்கப்பட்டவர்கள் இருக்கின்றனர்… அவர்களும் குடிமக்கள்தான்; ஆனால், குடிமக்களுக்குரிய உரிமைகள் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. அவர்கள் கட்டிய வரியிலிருந்து பள்ளிகள் நடத்தப்பட்டன. ஆனால், அவர்களுடைய குழந்தைகளை அந்தப் பள்ளியில் அனுமதிக்கவில்லை. அவர்கள் கட்டிய வரிப் பணத்திலிருந்து கிணறுகள் வெட்டப்பட்டன. ஆனால், அவர்கள் அந்தக் கிணற்றிலிருந்து குடிதண்ணீர் எடுக்க முடியாது.
அம்பேத்கர்எனக்கு வியட்நாமியர்களோடு எந்த சண்டையும் இல்லை. அவர்கள் யாரும் என்னை கருப்பன் என்று அழைத்தது இல்லை. பத்தாயிரம் மைல்களை கடந்து வெள்ளையின முதலாளிகள் கருப்பு நிறம் கொண்ட மக்களை உலகம் முழுக்க ஆதிக்கம் செலுத்த அப்பாவிகளை கொன்று, எரிக்க என்னால் செய்ய முடியாது. ஏன் நான் இவர்களை சொல்வதை கேட்டு சீருடை அணிந்து வியட்நாமின் அப்பாவி மக்கள் மீது குண்டுகள் மற்றும் தோட்டாக்களை செலுத்த வேண்டும்? இங்கே என் ஊரில் நீக்ரோ மக்கள் நாய்களை போல நடத்தப்பட்டு, மனித உரிமைகள் மறுக்கப்படுகிற பொழுது நான் ஏன் அங்கே போக வேண்டும்? இந்த தீய அநியாயம் முடிவுக்கு வரவேண்டிய தருணம் இது.
முகம்மது அலி