தொண்ணூறு சதவிகித சிந்தனையின் ஆற்றல், சாதாரண மனிதனால் வீணாக்கப்படுகிறது. எனவே தொடர்ந்து அவன் பெரிய தவறுகளைச் செய்துக் கொண்டே இருக்கிறான். சரியான பயிற்சியைப் பெற்ற மனிதனோ, மனமோ ஒருபோதும் தவறு செய்வதில்லை.
சுவாமி விவேகானந்தர்பலவீனத்திற்கான பரிகாரம், ஓயாது பலவீனத்தைக் குறித்து சிந்திப்பதல்ல. மாறாக வலிமையைக் குறித்து சிந்திப்பது தான். மக்களுக்கு, ஏற்கனவே அவர்களுக்குள் இருந்து வரும் வலிமையைப்பற்றிப் போதிப்பாயாக.
சுவாமி விவேகானந்தர்இந்த உலகம் ஓர் மிகப்பெரிய உடற்பயிற்சிக் கூடம். இங்கு நாம் நம்மை வலிமைப்படுத்திக்கொள்ளவே வந்திருக்கிறோம்.
சுவாமி விவேகானந்தர்