மற்றவர்களுக்கெல்லாம் எதிரி ஏகாதிபத்தியம். ஆனால், தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களைச் சுற்றிப் பல்வேறு எதிரிகளால் சூழப்பட்டுள்ளதால், எல்லோரையும் ஒரே நேரத்தில் எதிர்க்க முடியாது; எனவே, 2,000 ஆண்டுகளாக உயர் சாதி இந்துக்களால் இழைக்கப்படும் கொடுமைகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிராகப் போரிடுவது என முடிவெடுத்தேன்.
அம்பேத்கர்நான் இறந்த பிறகு, ஒரு கறுப்பர் இன மனிதனாக, நான் வென்ற சாம்பியன் பட்டங்களாலும், எந்நேரமும் மக்களை மகிழ்வித்த ஒரு சக உயிராகவும், தன் மக்களுடைய சுதந்திரத்துக்காக, சமூக நீதிக்காக, அவர்களுடைய சம உரிமைக்காப் போராடிய மனிதனாகவும்தான் நினைவுகூரப்பட விரும்புகிறேன்.
முகம்மது அலிஎனக்கு உதிரத்தைக் கொடுங்கள், சுதந்திரத்தை உங்களுக்கு நான் தருகிறேன்!
சுபாஷ் சந்திர போஸ்தண்ணீர் விட்டோ வளர்த்தோம்? சர்வேசா! இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம்.
சுப்ரமணிய பாரதிவலிமை வெற்றியினால் வருவதல்ல, வெற்றிக்கான போராட்டத்தினால் வருவது.
அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர்போராடாமல் சுதந்திரம் கிடைக்கும் என்று நம்புவதற்கு நமக்கு உரிமை இல்லை.
சேகுவேராசுதந்திரம் கொடுக்கப்படவில்லை, எடுத்துக்கொள்ளப்பட்டது.
ஜவஹர்லால் நேரு