சிறு சிறு பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு செய்தால் எந்த வேலையும் மிகக் கடினமானதாக இருக்காது!
ஹென்றி ஃபோர்டுஒரே சமயத்தில் இரண்டு வேலை செய்ய நம்மில் பலருக்குத் தெரியும். ஒரு சமயத்தில் ஒரே ஒரு வேலை செய்வதுதான் கடினமானது.
மிக்னான் மெக்லாலின்உங்கள் திருமணம் ஒரு புனித பந்தம் ஆனால் அதை எளிதென கருதாதீர்கள். எல்லா உறவுகளையும் போலவே அதை காக்க நீங்கள் தொடர்ந்து பாடுபட வேண்டும்.
ரேமண்ட் ஈடோஉங்களால் அது முடியும், ஆனால் அதை நீங்கள்தான் முடிக்க வேண்டும்.
பெஞ்சமின் டிஸ்ரேலிஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளர வளர அதிக அளவில் அறிவைப் பெறலாம். இந்த வழி தான் அறிவைப் பெறுவதற்குரிய ஒரே வழி. செருப்பை செப்பனிடுவதைத் தொழிலாகக் கொண்டவர் மனதை ஒருமுகப்படுத்தி தன் பணியைச் செய்தால் மேலும் சிறப்பாக செருப்புகளை செப்பனிடுவார். மனதை ஒருமுகப்படுத்தி சமையல் செய்யும் சமையற்காரர் மேலும் சிறந்த முறையில் சமைப்பார். பணம் சேர்ப்பதோ, கடவுள் வழிபாடோ வேறு எந்த ஒரு வேலையானாலும் மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளர வளர, மேலும் சிறப்பாக அந்தக் காரியத்தை செய்து முடிக்கலாம். இந்த ஒரு குரல், ஒரே உந்துதல், இயற்கையின் கதவுகளைத் திறந்து ஒளி வெள்ளங்களை வெளியே பாய்ந்தோடச் செய்கிறது.
சுவாமி விவேகானந்தர்துரு பிடித்துத் தேய்வதை விட உழைத்துத் தேய்வது மேலானது.
சுவாமி விவேகானந்தர்முன்னேற்றத்திற்கு அமைதி அவசியம். நமது வேறுபாடுகளை தீர்க்க நாம் இணைந்து செயல்பட்டு அமைதியான உலகத்தை உருவாக்குவோம்.
ஜவஹர்லால் நேருஅனைவருக்குமான சிறந்த எதிர்காலத்திற்காக நாம் உழைக்க வேண்டும். நாம் ஒன்றிணைந்து எல்லோரும் அமைதியுடனும் நல்லிணக்கத்துடனும் கூடிய உலகிற்காக உழைப்போம்.
ஜவஹர்லால் நேரு