மரத்தில் ஏற முடியாத மனிதன்தான் ஒருபோதும் மரத்திலிருந்து விழுந்ததில்லை என்று பெருமை பேசி கொண்டிருப்பான்
கும்பல்களுக்கு இருக்கும் அளவுக்கு ஒரு தனி நபர்க்கு முட்டாள்தனம் இருக்க முடியாது. அதனால்தான் வன்முறையின்போது கும்பல் கொலைகள் இருக்கின்றதே தவிர தனிநபர் கொலைகள் இருப்பதில்லை. -பென் ஹோரோவிட்ஸ்
விடுதலை உணர்வின் மிகவும் திருப்திகரமான வடிவம் பொறுப்புகளே இல்லாத வாழ்க்கை அல்ல, மாறாக உங்கள் பொறுப்புகளை நீங்களே தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பிருக்கும் வாழ்க்கையே ஆகும். -ஜேம்ஸ் க்ளியர்
வெகுமக்ககளின் சிந்தனையற்ற ஒப்புதலை விட, ஒற்றை அறிவார்ந்த மனிதரின் கடுமையான விமர்சனத்தை நான் மிகவும் விரும்புகிறேன். -ஜோகன்னஸ் கெப்லர்
கடவுள் என்ற சொல் எனக்கு ஒன்றுமே இல்லை. அது வெறும் மனித பலவீனத்தின் வெளிப்பாடு. எந்த ஒரு நுட்பமான விளக்கமும் இதில் என்னுடைய நிலைப்பாட்டை மாற்ற முடியாது -ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
வாயில்காப்பாளரையும் தலைமை செயலதிகாரியையும் ஒரே கண்ணியத்துடன் நடத்தும் முறையில் நான் வளர்க்கப்பட்டேன் -டாம் ஹார்டி
ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்படும் உழைப்பு பிரிவினை தான் முதல் உழைப்புப் பிரிவினையாகும். குடும்ப அமைப்பில் பெண் மீது ஆண் செலுத்தும் ஒடுக்குமுறை தான் முதல் வர்க்க பிரிவினையாகும், இந்த முரண்பாடுகள் தான் சமூகத்திலும் எதிரொலிக்கிறது -பிரெட்ரிக் எங்கெல்சு