ஜேர்மனியில் ஹிட்லர் செய்தவை அனைத்தும் சட்டப்பூர்வமானது என்பதை எப்போதும் மறவாதீர்கள்.
மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் Share on WhatsApp
பறக்க முடியாத போது ஓடுங்கள், ஓட முடியவில்லையென்றால் நடங்கள், நடக்க முடியவில்லையென்றால் தவழுங்கள், எப்படியாவது முன்னேறிக்கொண்டே இருங்கள்.
மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் Share on WhatsApp
ஒரு மனிதனின் உண்மையான குணம், அவன் வசதியாகவும், சௌகரியமாகவும் இருக்கும்போது வெளிப்படுவதில்லை; மாறாக, சவால்கள் மற்றும் சர்ச்சைகள் எழும்போதே வெளிப்படும்.
மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் Share on WhatsApp
இருளால் இருளைப் போக்க முடியாது; ஒளியால் மட்டுமே அது முடியும். வெறுப்பால் வெறுப்பை நீக்க முடியாது; அன்பால் மட்டுமே அது முடியும்.
மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் Share on WhatsApp
எப்போதும் நாம் கண்ணியம், கட்டுப்பாட்டின் உயர்தளங்களிலிருந்தே நம் போராட்டத்தை நடத்தவேண்டும். நம் போராட்டத்தை வன்முறைத் தாக்குதலாகக் கீழிறக்க அனுமதிக்கக் கூடாது.
மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்
நண்பர்களே, நம்பிக்கையின்மையின் பள்ளத்தாக்கில் நாம் சேற்றில் உழலவேண்டாம்.
மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்
வன்முறை நடைமுறைக்குப் பொருந்தாது, ஏன் என்றால் அது அனைவரது அழிவிலும் முடியும் ஒர் இறங்குமுக சுருள். வன்முறை அறமற்றது ஏன் என்றால் எதிரியின் புரிந்துணர்வை வெல்லாமல் இழிவுபடுத்த முனைகிறது. மாற்றப் பார்க்காமல் அழிக்க முனைகிறது. வன்முறை அறமற்றது ஏன் என்றால் அது அன்பால் அல்லாமல் வெறுப்பால் செழிப்படைகிறது. குமுகத்தை அழிக்கிறது. சகோதரத்துவத்தை ஏலாமல் செய்கிறது. சமூகத்தை உரையாடலில் அல்லாமல் தன்னுரையில் விடுகிறது. தப்பிப்பிழைத்தவர்களிடம் கசப்புத்தன்மையையும் அழித்தவர்களிடம் கொடூரத்தையும் உருவாக்கின்றது.
மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்
இருள் எப்போதும் இருட்டை நீக்காது, ஒளிதான் இருட்டை நீக்கும். வெறுப்பால் வெறுப்பை விரட்ட முடியாது, அன்பால்தான் வெறுப்பை அழிக்க முடியும்.
மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்
தகிக்கும் கோடையாயிருக்கும் நீக்ரோவின் இந்த மனக்குறை விடுதலை, சமத்துவம் எனும் உயிரூட்டும் வசந்தங்கள் வந்தாலன்றி மறையாது.
மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்
புரட்சியின் எழுச்சிமிகுந்த சூறாவளிகள் இந்த நாட்டின் அஸ்திவாரங்களை நீதி ஒளிரும் நாள் வரும்வரை அசைத்துக்கொண்டிருக்கும்.
மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்
நீக்ரோவின் வாழ்க்கை கவலை அளிக்கக் கூடிய விதத்தில் ஒதுக்கலின் விலங்காலும், பாரபட்சத்தின் சங்கிலியாலும் முடமாகிக்கிடக்கிறது.
மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்
வளைந்திருக்காத முதுகின் மீது யாராலும் சவாரி செய்ய முடியாது.
மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்
“வெள்ளையர்களுக்கு மட்டும்” எனும் அறிவிப்புப் பலகை ஒன்று நம் குழந்தைகளின் சுய மரியாதையையும் கண்ணியத்தையும் தகர்த்தெறிந்து கொண்டிருக்கும்வரைக்கும் நம்மால் திருப்தியடைய முடியாது.
மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்
நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.
மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்Explore the wisdom of Martin Luther King Jr. in their own words.
Browse books on Amazon →As an Amazon Associate, we earn from qualifying purchases.