எனக்கு வியட்நாமியர்களோடு எந்த சண்டையும் இல்லை. அவர்கள் யாரும் என்னை கருப்பன் என்று அழைத்தது இல்லை. பத்தாயிரம் மைல்களை கடந்து வெள்ளையின முதலாளிகள் கருப்பு நிறம் கொண்ட மக்களை உலகம் முழுக்க ஆதிக்கம் செலுத்த அப்பாவிகளை கொன்று, எரிக்க என்னால் செய்ய முடியாது. ஏன் நான் இவர்களை சொல்வதை கேட்டு சீருடை அணிந்து வியட்நாமின் அப்பாவி மக்கள் மீது குண்டுகள் மற்றும் தோட்டாக்களை செலுத்த வேண்டும்? இங்கே என் ஊரில் நீக்ரோ மக்கள் நாய்களை போல நடத்தப்பட்டு, மனித உரிமைகள் மறுக்கப்படுகிற பொழுது நான் ஏன் அங்கே போக வேண்டும்? இந்த தீய அநியாயம் முடிவுக்கு வரவேண்டிய தருணம் இது.
முகம்மது அலிநான் இறந்த பிறகு, ஒரு கறுப்பர் இன மனிதனாக, நான் வென்ற சாம்பியன் பட்டங்களாலும், எந்நேரமும் மக்களை மகிழ்வித்த ஒரு சக உயிராகவும், தன் மக்களுடைய சுதந்திரத்துக்காக, சமூக நீதிக்காக, அவர்களுடைய சம உரிமைக்காப் போராடிய மனிதனாகவும்தான் நினைவுகூரப்பட விரும்புகிறேன்.
முகம்மது அலி90% கருப்பு நிறத்தவர்களை கொண்ட நாட்டில், கருப்பு நிறத்தை கொண்டவர்கள் தாழ்வு மனப்பான்மையுடன் இருப்பது வேதனை. கருப்பாய் இருங்கள், அழகாய் இருங்கள்!
நந்திதா தாஸ்