சுதந்திரம் என்றால் பயமில்லாமல் வாழ்வதுதான். பயமில்லாமல் வாழ நியாயமாக நடந்துகொள்ள வேண்டும்.
வாழ்க்கையின் மீதான அன்பு, மக்களின் மீதான அன்பு, நீதியின் மீதான அன்பு, விடுதலையின் மீதான அன்பு என்று அன்பால் சாத்தியப்படுகிறது புரட்சி.
நீதி, ஒரு சில சக்திவாய்ந்தவர்களின் கருவியாக உள்ளது; அடக்குமுறை சக்திகளின் வசதிக்கேற்ப சட்ட விளக்கங்கள் தொடர்ந்து மாறுகிறது.
நம் நாட்டுக்கு சுதந்திரம் தேவை, ஆனால் பிறர் சுரண்டபடுவதின் மூலம் அது நமக்கு கிடைக்க தேவையில்லை.
நாத்திகன் என்றால் அறிவாளி என்றுதான் பொருள். எவன் ஒருவன் நீதியில் நம்பிக்கை வைத்து நடக்கிறானோ அவன் நாத்திகன்.