"வாழ்ந்தேன்" என்பதற்கான சாட்சியை பதிவு செய்யுங்கள்.
சமுத்திரக்கனிநோக்கம் எது என்பதை முதலில் தீர்மானி. அதுவே இலக்கு என்பதை உறுதிசெய்து கொள். கையில் பணம் இல்லையே, உடலில் வலு இல்லையே, உதவி செய்ய நண்பர்கள் இல்லையே என்றெல்லாம் யோசித்து நேரத்தை வீணாக்காதே! எதற்கும் பயப்படாதே, தயங்காதே. இலக்கை நோக்கி அடியெடுத்து வை. தொடர்ந்து முன்னேறு, சோதனைகள் விலகும். பாதை தெளிவாகும். நோக்கத்தை அடைந்தே தீருவாய்! அதை யாராலும் தடுக்க முடியாது.
சுவாமி விவேகானந்தர்திறமையும், நிபுணத்துவமும் கொண்ட நல்ல மனிதர்களை உருவாக்குவதே கல்வியின் நோக்கம். அறிவொளி பெற்ற மனிதர்களை ஆசிரியர்களால் உருவாக்க முடியும்.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்