இனம், மதம், பாரம்பரியம், தேசியம் ஆகிய அனைத்து பெருமைகளுமே, நமக்கு அறிமுகமே இல்லாத மனிதர்களை வெறுப்பதற்கே கற்றுக்கொடுக்கின்றன.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்ஆண்மை என்ற சொல்லை அழிக்காமல் பெண்களுக்கு விடுதலை இல்லை, மதம் என்ற கைவிலங்கை உடைக்காமல் மக்களுக்கு விடுதலை இல்லை.
அம்பேத்கர்எவன் ஒருவனுக்கு தன்னிடத்தில் நம்பிக்கை இல்லையோ அவனே நாத்திகன். பண்டைய மதங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவனைத்தான் நாத்திகன் என்று குறிப்பிட்டன. புதிய மதம் தன்னம்பிக்கை இல்லாதவனைத்தான் நாத்திகன் என்று சொல்லுகிறது.
சுவாமி விவேகானந்தர்நாட்டின் முன்னேற்றத்திற்கு மக்களின் ஒழுக்கமே முக்கியமானது. ஆனால் நமது நாட்டில் மதமும் மூட நம்பிக்கையும், ஒழுக்கத்திற்கு நிரந்தர விரோதமாயிருக்கின்றன.
பெரியார்நான் சொல்கிறேன் என்பதற்காக எதையும் நீங்கள் ஒப்புக்கொள்ளாதீர்கள். பிறகு, மதவாதிகள் புராணத்தை முன்வைத்து பேசுவதை நீங்கள் ஒப்புக் கொள்வதற்கும், இதற்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். நான் பேசியதை வைத்து உங்களுக்குள் நிறைய கேள்விகளை எழுப்புங்கள், அதன் பின்னர் நான் சொன்னது சரியெனும் பட்சம் ஒப்புக் கொள்ளுங்கள்.
பெரியார்