விடுதலை உணர்வின் மிகவும் திருப்திகரமான வடிவம் பொறுப்புகளே இல்லாத வாழ்க்கை அல்ல, மாறாக, உங்கள் பொறுப்புகளை நீங்களே தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பிருக்கும் வாழ்க்கையே ஆகும்.
ஜேம்ஸ் கிளியர்நாம் எதைச் செய்தாலும், எதற்காக செய்கிறோம் என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டும்.
காமராசர்சுதந்திரம் என்பது பொறுப்புகளற்ற தன்மை அல்ல, எனக்கு தேவையானதை தேர்ந்தெடுத்து அதன் பொறுப்புகளை ஏற்பதே சுதந்திரம்.
பாலோ கோயல்ஹோசுதந்திரமும் அதிகாரமும், பொறுப்பையும் சேர்த்தே கொண்டது.
ஜவஹர்லால் நேருநீங்கள் துன்பப்பட்டால் அது உங்களால் தான், நீங்கள் ஆனந்தமாக உணர்ந்தால் அதுவும் உங்களால் தான். வேறு யாரும் பொறுப்பல்ல, நீங்கள்தான், நீங்கள் மட்டுமே பொறுப்பு. உங்களின் நரகமும் சொர்க்கமும் நீங்களே.
ஓஷோநாம் இன்று இப்படி இருப்பதற்கு நாமே பொறுப்பு. இனி எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அப்படி நம்மை நாமே மாற்றிக் கொளும் ஆற்றலும் நம்மிடம் உள்ளது!
சுவாமி விவேகானந்தர்கல்வி என்பது அறிவை பெறுதல் மட்டுமல்ல. விமர்சனங்களை ஏற்கும் சிந்தனை திறனும் சமூக பொறுப்புணர்வையும் சேர்த்தது அது.
ஜவஹர்லால் நேருநாம் இப்போது இருக்கும் நிலைமைக்கு நாமே பொறுப்பாளிகள். நாம் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அப்படி நம்மை அமைத்துக்கொள்ளும் ஆற்றல் நம்மிடமே இருக்கிறது. நாம் இப்போது இருக்கும் நிலை நம்முடைய முன்வினைகளின் பலன் என்றால், எதிர்காலத்தில் நாம் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அதை நாம் நமது தற்போதைய செயல்களால் உண்டாக்கிக் கொள்ள முடியும் என்பது வெளிப்படை.
சுவாமி விவேகானந்தர்பிறர் முதுகுக்குப் பின்னால் நாம் செய்யவேண்டிய காரியம் தட்டிக்கொடுப்பது மட்டும்தான்.
சுவாமி விவேகானந்தர்