நேற்றிலிருந்து கற்றுக்கொள். இன்றைக்காக வாழ். நாளை மீது நம்பிக்கை வை. மிக முக்கியமாக கேள்விகளை நிறுத்தாதே.
எப்போதும் நீங்கள் நேற்றை பற்றியே சிந்திப்பீர்களானால் நாளை உங்களுக்கு சிறப்பாக இருக்காது.
இன்றைய தினம் உங்களுடையது நீங்கள் ஏறவேண்டிய சிகரம் காத்துக்கொண்டிருக்கின்றது. உடனே உங்கள் முதல் அடியை எடுத்து வையுங்கள்!
இன்றைய தினம் கடினமானதாக இருக்கலாம், நாளை மிகக் கடினமான நாளாகவும் இருக்கலாம், ஆனால் நாளை மறுநாள் மிக அழகானது. பெரும்பாலானோர் இரண்டாவது நாளே பின்வாங்கி விடுகின்றனர்,
மீதமிருக்கும் நாட்களை எண்ணி காலந்தாழ்த்தாதே, ஒவ்வொரு நாளையும் உனதாக்கு.
ஒவ்வொரு நாளையும் கடைசி நாள் போல வாழுங்கள். ஏனெனில், ஒருநாள் அது உண்மையாகும்.
ஆயிரம் நேற்றுகளுக்கும் பல லட்சம் நாளைகளுக்கும் இடையில் ஒரே ஒரு இன்று மட்டுமே உள்ளது. அதைத் தவற விடாதீர்கள்!
இன்றைய உங்களின் செயல் அனைத்து நாளைகளையும் முன்னேற்ற வல்லது.
நேற்று விழுந்திருக்கலாம், பரவாயில்லை இன்று மீண்டும் எழுங்கள்.