பாலியல் நூல்களை மடோனா விற்றிருப்பதைக் காட்டிலும் இயற்பியல் நூல்களை நான் அதிகமாக விற்றுள்ளேன்.
ஸ்டீபன் ஹாக்கிங்
கடவுள் அண்டத்தைப் படைப்பதற்கு முன் என்ன செய்தார்? என்ற கேள்விக்கு, இத்தகைய வினாக்களைக் கேட்பவர்களுக்காக அவர் நரகத்தைத் தயாரித்துக் கொண்டிருந்தார்.
ஸ்டீபன் ஹாக்கிங்
பாதுகாப்பு உணர்வு என்பது நாம் என்ன வைத்திருக்கவில்லை என்பதை விட மற்றவர்களிடம் என்ன இருக்கிறது என்பதை வைத்து இப்போது மதிப்பிடப்படுகிறது.
ஸ்டீபன் ஹாக்கிங்
தாலமியின் புவிமையக் கோட்பாட்டில் காணப்பட்ட பெரும் நன்மை யாதென்றால் அது நிலையான விண்மீன்களின் கோளத்திற்குப் புறத்தே சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் ஏராளமாய் இடம் விட்டு வைத்திருந்தது. அதனால்தான் கிறித்துவ திருச்சபை ஏற்றுக் கொண்டது.
ஸ்டீபன் ஹாக்கிங்
ஒரு மிகச் சாதாரண நட்சத்திரத்தின் மிகச் சிறிய கிரகத்தில் வாழும் சற்றே முன்னேறிய குரங்கினம்தான் நாம்!
ஸ்டீபன் ஹாக்கிங்
பரிசோதனைகளின் முடிவுகள் ஒரு கோட்பாட்டுக்கு எத்தனை முறை ஒத்துப் போனாலும் சரி, அடுத்த முறை அம்முடிவு அக்கோட்பாட்டுடன் முரண்படாது என்பதற்கு உறுதியேதுமில்லை.
ஸ்டீபன் ஹாக்கிங்Explore the wisdom of Stephen Hawking in their own words.
Browse books on Amazon →As an Amazon Associate, we earn from qualifying purchases.