கட்டளையிட விரும்புபவன் முதலில் பணிவதற்குக் கற்றுக் கொள்ள வேண்டும்.
நாம் எதை தொடர்ந்து செய்கிறோமோ, அதுவாகவே ஆகிறோம். எனவே, திறமை என்பது ஒரு செயல் அல்ல அது ஒரு பழக்கம்.
இரு உடல்களில் ஓருயிர் வசித்தல்தான் காதல்.
கல்வியின் வேர்கள் கசப்பானவை, ஆனால் பழம் இனிப்பானது.
இதயத்தைக் கற்பிக்காமல் மனதைக் கற்பிப்பது கல்வி அல்ல.
செய்வதற்கு முன் நாம் கற்றுக்கொள்ள வேண்டியவற்றை அதை செய்வதன் மூலம் கற்றுக்கொள்கிறோம்.
ஒரு எண்ணத்தை ஏற்காமல் அதை பேச அனுமதிப்பதுதான் படித்த மனதின் அடையாளம்.
கல்வி என்பது செழுமையில் ஆபரணம், துன்பங்களில் அடைக்கலம்.
அனைவருக்கும் நண்பன் யாருக்கும் நண்பன் அல்ல.