பயிற்சியின் ஒவ்வொரு நிமிடத்தையும் நான் வெறுத்தேன், 'நிறுத்தாதே. இப்போது துன்பப்பட்டு வாழ்நாள் முழுவதும் வெற்றியாளனாக வாழ்.' என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.
முகம்மது அலிஇங்கு வாழ்ந்தவர்களிலேயே மிகவும் அங்கீகரிக்கப்பட்ட நேசிக்கப்பட்ட மனிதன் நான்தான். ஏனெனில் ஏசுவும் மோசஸும் வாழ்ந்த காலத்தில் செயற்கைகோள்கள் இல்லை.
முகம்மது அலிவீரர்கள் வெறும் உடற்பயிற்சி கூடங்களில் உருவாவதில்லை. அவர்களுக்கு ஆழ்மனதில் ஒரு கனவு, ஒரு தொலைநோக்கு, ஒரு விருப்பம் இருக்க வேண்டும். அவர்களுக்கு திறமையும் முக்கியம் மனோதிடமும் முக்கியம். ஆனால் திறமையைவிட மனோ திடமே அதிமுக்கியம்.
முகம்மது அலிஎனக்கு வியட்நாமியர்களோடு எந்த சண்டையும் இல்லை. அவர்கள் யாரும் என்னை கருப்பன் என்று அழைத்தது இல்லை. பத்தாயிரம் மைல்களை கடந்து வெள்ளையின முதலாளிகள் கருப்பு நிறம் கொண்ட மக்களை உலகம் முழுக்க ஆதிக்கம் செலுத்த அப்பாவிகளை கொன்று, எரிக்க என்னால் செய்ய முடியாது. ஏன் நான் இவர்களை சொல்வதை கேட்டு சீருடை அணிந்து வியட்நாமின் அப்பாவி மக்கள் மீது குண்டுகள் மற்றும் தோட்டாக்களை செலுத்த வேண்டும்? இங்கே என் ஊரில் நீக்ரோ மக்கள் நாய்களை போல நடத்தப்பட்டு, மனித உரிமைகள் மறுக்கப்படுகிற பொழுது நான் ஏன் அங்கே போக வேண்டும்? இந்த தீய அநியாயம் முடிவுக்கு வரவேண்டிய தருணம் இது.
முகம்மது அலிநான் இறந்த பிறகு, ஒரு கறுப்பர் இன மனிதனாக, நான் வென்ற சாம்பியன் பட்டங்களாலும், எந்நேரமும் மக்களை மகிழ்வித்த ஒரு சக உயிராகவும், தன் மக்களுடைய சுதந்திரத்துக்காக, சமூக நீதிக்காக, அவர்களுடைய சம உரிமைக்காப் போராடிய மனிதனாகவும்தான் நினைவுகூரப்பட விரும்புகிறேன்.
முகம்மது அலிஎன் மனம் அதை எண்ண முடிந்தால், என் இதயம் அதை நம்பினால், அதை அடையவும் என்னால் முடியும்.
முகம்மது அலிமுன்னாள் உள்ள மலைகள் உங்களை சோர்வாக்குவதில்லை, உங்களை சோர்வாக்குவது காலனியில் உள்ள கூழாங்கற்களே.
முகம்மது அலி