எல்லா அரசுகளும், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை தலைமைப் பொறுப்பில் நியமித்துவிட்டு, அச்சமூகத்தின் குரலை ஒடுக்க நினைக்கின்றனர். ஆனால் அதை நடக்க விடமாட்டேன்.
ஜோயிதா மொண்டல்நம் எதிரி பயமே. வெறுப்பை நாம் எதிரியாக நினைக்கிறோம், ஆனால் உண்மையில் பயமே எதிரி.
மகாத்மா காந்திஉங்களுக்கு பயம் இல்லையென்றால் என்ன செய்துகொண்டிருப்பீர்கள் என யோசியுங்கள்.
ஷெரில் சாண்ட்பர்க்அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.
சுப்ரமணிய பாரதிபயத்தை வெல்ல விரும்பினால், வீட்டில் உட்கார்ந்து அதைப் பற்றி சிந்தித்து கொண்டே இருந்தால் போதாது. வெளியே வந்து செயலில் இறங்க வேண்டும்.
டேல் கார்னகிஉங்கள் அச்சங்களை கொண்டு அல்ல, உங்கள் நம்பிக்கைகளையும் கனவுகளையும் கொண்டு சிந்தியுங்கள். உங்கள் ஏமாற்றங்களைப் பற்றி அல்ல, உங்களின் கூர்மைப்படுத்தாத திறனைப் பற்றி சிந்தியுங்கள். நீங்கள் எதை முயற்சி தோற்றீர்கள் என்பதைப் பற்றி அல்லாமல், இன்னும் உங்களால் என்ன செய்ய முடியும் என்பதில் கவனம் செலுத்துங்கள்.
போப் ஜான் XXIIIஉலகின் மிகப்பெரிய பயம், பிறர் என்ன நினைப்பார்கள் எனும் பயமே, அந்த பயத்தை கடக்கும் தருணம் முதல், இனி நீங்கள் ஆடு அல்ல, சிங்கம்.
ஓஷோநோக்கம் எது என்பதை முதலில் தீர்மானி. அதுவே இலக்கு என்பதை உறுதிசெய்து கொள். கையில் பணம் இல்லையே, உடலில் வலு இல்லையே, உதவி செய்ய நண்பர்கள் இல்லையே என்றெல்லாம் யோசித்து நேரத்தை வீணாக்காதே! எதற்கும் பயப்படாதே, தயங்காதே. இலக்கை நோக்கி அடியெடுத்து வை. தொடர்ந்து முன்னேறு, சோதனைகள் விலகும். பாதை தெளிவாகும். நோக்கத்தை அடைந்தே தீருவாய்! அதை யாராலும் தடுக்க முடியாது.
சுவாமி விவேகானந்தர்