நிறைய படித்து, மூளையை குறைவாக பயன்படுத்துபவன், சிந்தனை என்னும் சோம்பலில் விழுகிறான்.
சோம்பேறி ஒரு செயலை முயற்சிக்கும் முன்பே, சாதனையாளர் பலமுறை தோல்வி அடைந்து விடுகிறார். தோல்வியே வெற்றிக்கு முதல் படி!
சோர்வடைவதற்கு முன்பே ஓய்வெடுப்பதற்கு பெயர் சோம்பறித்தனம் இல்லாமல் வேறென்ன?
எதுவுமே செய்யாமல் இருப்பவன் மட்டும் சோம்பேறியல்ல, தன்னால் முடிந்ததை செய்யாமல் இருப்பவனும் சோம்பேறியே!
மெதுவாக நடக்கும் தோல்வியை வேகமாக ஓடிப் பிடிக்கிறது சோம்பல்! உற்சாகம் வெற்றியின் வாசல்!
ஜோதிடம் என்பது சோம்பேறிகளின் மூலதனம்; பொய் சொல்லி ஏமாற்றிப் பிழைப்பதற்கான தொழில்முறை.