உங்கள் வெற்றியும் மகிழ்ச்சியும் உங்களுக்குள்ளேயே உள்ளன. மகிழ்ச்சியாக இருக்க தீர்மானியுங்கள், உங்கள் மனநினையே, உங்கள் சிரமங்களிலிருந்து உங்களை காக்கும்.
ஹெலன் கெல்லர்எந்த பெரிய அடியும் வெற்றியை தீர்மானிப்பதில்லை. நிறைய சிறு சிறு அடிகளே வெற்றியை தீர்மானிக்கின்றன.
பீட்டர் ஏ கோஹன்தோல்விகளை எதிர்கொள்ள கற்றுக் கொள்ளுங்கள், அதுதான் வெற்றிக்கான மிக முக்கியமான வழி.
தாமஸ் ஆல்வா எடிசன்வெற்றி பெற மூன்று வழிகள், ஒன்று, மற்றவர்களை விட அதிகமாக தெரிந்து கொள்ளுங்கள். இரண்டு, மற்றவர்களை விட அதிகமாக பணியாற்றுங்கள். மூன்று, மற்றவர்களை விட குறைவாக எதிர்பாருங்கள்.
வில்லியம் ஷேக்ஸ்பியர்வெற்றிகரமான திருமணத்தை உருவாக்குவது விவசாயத்தை போன்றது என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் தினமும் காலையில் மீண்டும் தொடங்க வேண்டும்.
எச் ஜாக்சன் பிரவுன் ஜூனியர்வெற்றிபெற, நம்மால் முடியும் என்பதை முதலில் நம்ப வேண்டும்.
நீகாஸ் கசந்த்சாகீஸ்வெற்றி என்பது மகிழ்ச்சிக்கான திறவுகோல் அல்ல. மகிழ்ச்சியே வெற்றிக்காண சாவி. நீங்கள் செய்வதை நேசித்தால், வெற்றி பெறுவீர்கள்.
ஆல்பர்ட் ஸ்விட்சர்வெற்றி பெற வேண்டும் என்ற விருப்பம், வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை, உங்களின் முழுத் திறனையும் அடைய வேண்டும் என்ற தீரா ஆவல், இவையே மேன்மைக்கான கதவைத் திறக்கும் சாவிகள்.
கன்பூசியஸ்எனது வெற்றிக்கு காரணம் - நான் எப்போதும் எனது தோல்விகளுக்கு என்னைத்தவிர வேறு எந்த காரணத்தையும் கூறுவதில்லை.
புளோரன்சு நைட்டிங்கேல்நீங்கள் வெற்றிபெற விரும்பினால், பெரும்பாலானோர் பயணிக்கும் பழைய பாதைகளுக்கு மாறாக, புதிய பாதைகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஜான் டி ராக்பெல்லர்அன்றாட சிறிய முயற்சிகளின் தொகுப்பே வெற்றி!
முகமது அலி ஜின்னாவெற்றி இறுதியுமல்ல, தோல்வி முடிவுமல்ல. தொடர்வதன் துணிவே பெரிது.
வின்ஸ்டன் சர்ச்சில்நற்குணம் கொண்ட மனிதனுக்கு வெற்றி மட்டுமே உந்துதல்.
வூடி ஹேய்ஸ்வெற்றி பெறுவதற்கான விருப்பம் முக்கியம்தான், ஆனால் அதைவிட முக்கியம் பயிற்சிக்கான விருப்பமே.
பாபி நைட்வெற்றி பெற வேண்டும் என்ற உறுதி எனக்கு வலுவாக இருந்தால் தோல்வி என்னை ஒருபோதும் வெல்ல முடியாது.
ஓக் மண்டினோகடந்த காலத்தில் நான் சந்தித்த சவால்கள் எதிர்காலத்தில் வெற்றி பெற உதவும்.
பிலிப் எமேக்வாலிமுயற்சியை பாதியில் கைவிடுவதுதான் மிகப்பெரிய பலவீனம். வெற்றிக்கான மிக உறுதியான வழி எப்போதும் இன்னும் ஒரு முறை முயல்வதே.
தாமஸ் ஆல்வா எடிசன்மெதுவாக நடக்கும் தோல்வியை வேகமாக ஓடிப் பிடிக்கிறது சோம்பல்! உற்சாகம் வெற்றியின் வாசல்!
ஜிக் ஜிக்லர்தனக்கென்று ஒரு தகுதியை, திறமையை உண்டாக்கிக்கொள்ளும் எவரும், வாழ்க்கையில் திட்டமிட்ட ஓர் உயர்வை அடைந்துவிட முடியும்!
நெப்போலியன் ஹில்முதல் வெற்றிக்குப் பிறகு ஓய்வெடுக்காதீர்கள், அதற்கு பிறகு நீங்கள் தோற்றால், உங்கள் முதல் வெற்றி அதிர்ஷ்டத்தால் வந்தது என்று சொல்ல நிறைய உதடுகள் காத்திருக்கின்றன.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியானாலும் உங்கள் வாழ்க்கை சிகரத்தின் உச்சியானாலும், உச்சத்தை எட்ட வலிமை வேண்டும்.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் இறப்பு ஒரு "சரித்திரமாக" இருக்க வேண்டும்.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்க்கான முதல் அறிகுறி!
சுவாமி விவேகானந்தர்வெற்றி என்பது, உங்கள் கையெழுத்து Autographஆக மாறுவதே.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்வெற்றிக் கதைகளைப் படிக்காதீர்கள், வெற்றியை பற்றி உங்களால் அறிய மட்டுமே முடியும். தோல்விக் கதைகளைப் படியுங்கள், வெற்றியைப் பெற சில வழிகளையும் காணமுடியும்.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்படைப்பாற்றல் என்பது எதிர்கால வெற்றிக்கான திறவுகோலாகும், ஆரம்பக் கல்வியிலேயே ஆசிரியர்களால் குழந்தைகளிடம் அந்த படைப்பாற்றலைக் கொண்டு வர முடியும்.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்