நான் இன்று வாழ்வதற்கு என் தந்தைக்கு கடமைப்பட்டிருக்கிறேன், ஆனால் நன்றாக வாழ்வதற்கு என் ஆசிரியருக்கே கடமைப்பட்டுள்ளேன்.
மாவீரன் அலெக்ஸ்சாண்டர்சிறந்த ஆசிரியர்கள் எங்கு பார்க்க வேண்டும் என்று சொல்வார்கள், ஆனால் எதைப் பார்க்க வேண்டும் என்று சொல்ல மாட்டார்கள்.
அலெக்ஸாண்ட்ரா கே. ட்ரென்ஃபோர்மாணவர்களிடமிருந்து சிறந்தவற்றை வெளிக்கொண்டுவர நல்ல ஆசிரியர்களுக்குத் தெரியும்.
சார்லஸ் குரால்ட்ஒரு தேசத்தை ஊழலில்லாமலும், அறிவாளிகளின் தேசமாகவும் மாற்ற மூவரால் மட்டுமே முடியும். தந்தை, தாய், ஆசிரியர்தான் அந்த மூன்று பேர்.
தெரியவில்லைஎந்த நாட்டிற்கும் முதுகெலும்பு ஆசிரியர்களே, நாட்டின் அனைத்து இலக்குகளையும் வெற்றி அடையச் செய்யும் தூண்கள் அவர்கள்.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்ஆசிரியப்பணி என்பது ஒரு தனிநபரின் தன்மை, திறன் மற்றும் எதிர்காலத்தை வடிவமைக்கும் மிகவும் உன்னதமான தொழில். மக்கள் என்னை ஒரு நல்ல ஆசிரியராக நினைவு கூர்ந்தால் அதுவே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கவுரவமாக இருக்கும்.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்திறமையும், நிபுணத்துவமும் கொண்ட நல்ல மனிதர்களை உருவாக்குவதே கல்வியின் நோக்கம். அறிவொளி பெற்ற மனிதர்களை ஆசிரியர்களால் உருவாக்க முடியும்.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்படைப்பாற்றல் என்பது எதிர்கால வெற்றிக்கான திறவுகோலாகும், ஆரம்பக் கல்வியிலேயே ஆசிரியர்களால் குழந்தைகளிடம் அந்த படைப்பாற்றலைக் கொண்டு வர முடியும்.
ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்ஆசிரியர்கள் முதலில் மக்களுக்குச் சுயமரியாதை இன்னதென்பதைக் கற்றுக் கொடுக்க வேண்டும்.
பெரியார்