நாம் ஒருவருக்கொருவர் ஒரு ரூபாய் கொடுத்தால், நம் இருவரிடமும் ஒரு ரூபாய் தான் இருக்கும். நாம் ஒருவருக்கொருவர் ஒரு நல்ல எண்ணத்தை பகிர்ந்தால், நம் இருவரிடமும் இரு நல்ல எண்ணங்கள் இருக்கும்.
சுவாமி விவேகானந்தர் Share on WhatsApp
பின்னோக்கிப் பார்க்காதே. எப்போதும் முன்னோக்கி நீ எதைச் செய்ய விரும்புகிறாயோ அதையே பார். நீ முன்னேறுவது உறுதி!
சுவாமி விவேகானந்தர் Share on WhatsApp
பிறரது பாராட்டுக்கும், பழிக்கும் செவி சாய்த்தால், மகத்தான காரியம் எதையும் செய்யமுடியாது.
சுவாமி விவேகானந்தர் Share on WhatsApp
உன் வாழ்க்கையின் எந்த ஒரு நாளில் உன் முன்னால் எந்தப் பிரச்சினையையும் நீ சந்திக்காமல் முன் செல்கிறாயோ, அப்பொழுது தவறான பாதையில் நீ பயணிக்கிறாய் என்று அறிவாய்.
சுவாமி விவேகானந்தர் Share on WhatsApp
தன்னம்பிக்கை கொண்டிருந்த ஒரு சிலருடைய வரலாறே உலக சரித்திரமாகும். அத்தகைய நம்பிக்கை, உள்ளே இருக்கும் தெய்விகத்தை வெளியே வரவழைக்கிறது. நீ எதையும் சாதிக்க முடியும். அளவு கடந்த ஆற்றலை வெளிப்படுத்தப் போதுமான அளவிற்கு முயற்சி செய்யாத போது தான் தோல்வி அடைகிறாய். ஒரு மனிதனோ, ஒரு நாடோ தன்னம்பிக்கை இழந்த உடனே அழிவு வருகிறது.
சுவாமி விவேகானந்தர் Share on WhatsApp
நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னை பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே ஆகிவிடுவாய். வலிமையுடயவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆகிவிடுவாய்.
சுவாமி விவேகானந்தர் Share on WhatsApp
பலவீனத்திற்கான பரிகாரம், ஓயாது பலவீனத்தைக் குறித்து சிந்திப்பதல்ல. மாறாக வலிமையைக் குறித்து சிந்திப்பது தான். மக்களுக்கு, ஏற்கனவே அவர்களுக்குள் இருந்து வரும் வலிமையைப்பற்றிப் போதிப்பாயாக.
சுவாமி விவேகானந்தர் Share on WhatsApp
இந்த உலகம் ஓர் மிகப்பெரிய உடற்பயிற்சிக் கூடம். இங்கு நாம் நம்மை வலிமைப்படுத்திக்கொள்ளவே வந்திருக்கிறோம்.
சுவாமி விவேகானந்தர் Share on WhatsApp
பிறர் முதுகுக்குப் பின்னால் நாம் செய்யவேண்டிய காரியம் தட்டிக்கொடுப்பது மட்டும்தான்.
சுவாமி விவேகானந்தர் Share on WhatsApp
ஏழைச் சிறுவன் கல்வியை நாடி வர முடியாவிட்டால் கல்விதான் அவனை நாடிப் போக வேண்டும்.
சுவாமி விவேகானந்தர் Share on WhatsApp
தொண்ணூறு சதவிகித சிந்தனையின் ஆற்றல், சாதாரண மனிதனால் வீணாக்கப்படுகிறது. எனவே தொடர்ந்து அவன் பெரிய தவறுகளைச் செய்துக் கொண்டே இருக்கிறான். சரியான பயிற்சியைப் பெற்ற மனிதனோ, மனமோ ஒருபோதும் தவறு செய்வதில்லை.
சுவாமி விவேகானந்தர் Share on WhatsApp
உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு உதவ விருப்பினால் உலகை தூற்றாதே, குறை சொல்லாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின் குறைகள், குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை அல்லவா?
சுவாமி விவேகானந்தர் Share on WhatsApp
வாழ்வும் சாவும், நன்மையும் தீமையும், அறிவும் அறியாமையும் ஆன கலவைதான் மாயை, அதாவது பிரபஞ்சத்தின் இயல்பு. இந்த மாயையில் நீ எல்லையற்ற மகிழ்ச்சிக்காக அலையலாம், ஆனால் நீ தீமையையும் காண்பாய். தீமையின்றி நன்மை இருக்குமென்பது சிறுபிள்ளைதனம்.
சுவாமி விவேகானந்தர் Share on WhatsApp
எவன் ஒருவனுக்கு தன்னிடத்தில் நம்பிக்கை இல்லையோ அவனே நாத்திகன். பண்டைய மதங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவனைத்தான் நாத்திகன் என்று குறிப்பிட்டன. புதிய மதம் தன்னம்பிக்கை இல்லாதவனைத்தான் நாத்திகன் என்று சொல்லுகிறது.
சுவாமி விவேகானந்தர் Share on WhatsApp
இவனை நம்பு, அவனை நம்பு என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால் நான் சொல்கிறேன், முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை. அது தான் வழி. உன்னிடத்தில் நீ நம்பிக்கை வை, எல்லா ஆற்றல்களும் உன்னுள்ளேயே உள்ளன. அதை உணர்ந்து அந்த ஆற்றலை வெளிப்படுத்து. 'நான் எதையும் சாதிக்க வல்லவன்' என்று சொல். நீ உறுதியுடன் விஷத்தை பொருட்படுத்தாதிருந்தால், பாம்பின் விஷமும் உன் முன் சக்தியற்றதே.
சுவாமி விவேகானந்தர் Share on WhatsApp
ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளர வளர அதிக அளவில் அறிவைப் பெறலாம். இந்த வழி தான் அறிவைப் பெறுவதற்குரிய ஒரே வழி. செருப்பை செப்பனிடுவதைத் தொழிலாகக் கொண்டவர் மனதை ஒருமுகப்படுத்தி தன் பணியைச் செய்தால் மேலும் சிறப்பாக செருப்புகளை செப்பனிடுவார். மனதை ஒருமுகப்படுத்தி சமையல் செய்யும் சமையற்காரர் மேலும் சிறந்த முறையில் சமைப்பார். பணம் சேர்ப்பதோ, கடவுள் வழிபாடோ வேறு எந்த ஒரு வேலையானாலும் மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் வளர வளர, மேலும் சிறப்பாக அந்தக் காரியத்தை செய்து முடிக்கலாம். இந்த ஒரு குரல், ஒரே உந்துதல், இயற்கையின் கதவுகளைத் திறந்து ஒளி வெள்ளங்களை வெளியே பாய்ந்தோடச் செய்கிறது.
சுவாமி விவேகானந்தர் Share on WhatsApp
உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்க்கான முதல் அறிகுறி!
சுவாமி விவேகானந்தர் Share on WhatsApp
எந்த ஒரு சக்தியையும் புதிதாக உண்டாக்க முடியாது. ஏற்கனவே உள்ள சக்தியைத்தான் வேறு திசைக்கு திருப்ப முடியும். எனவே, நமது கைகளில் ஏற்கனவே உள்ள மாபெரும் ஆற்றல்களை அடக்கி ஆள நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அவற்றை மனதின் வலிமையைக் கொண்டு வெறும் மிருக சக்தியாக இருப்பதற்கு பதிலாக, ஆன்மிகச் சக்தியாக இருக்கச் செய். பிரம்மச்சரியம்தான் எல்லா ஒழுக்கங்களுக்கும், எல்லா மதங்களுக்கும் அடித்தளமாக விளங்குகிறது என்பது இதனின்று தெளிவாகிறது.
சுவாமி விவேகானந்தர் Share on WhatsApp
நமது சொந்த மனப்பான்மை தான் நமக்கு ஏற்றாற்போல் உலகத்தைத் தோன்றும்படி செய்கிறது. நமது எண்ணங்களே பொருள்களை அழகு பொருந்தியவை ஆக்குகின்றன. நமது எண்ணங்களே பொருள்களை அவலட்சணமாக்குகின்றன. இந்த உலகம் முழுவதும் நமது சொந்த மனதிலேயே அடங்கியிருக்கிறது. எல்லாவற்றையும் சரியான முறையில் புரிந்துகொள்ளக் கற்றுக்கொள்.
சுவாமி விவேகானந்தர் Share on WhatsApp
நாம் இப்போது இருக்கும் நிலைமைக்கு நாமே பொறுப்பாளிகள். நாம் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அப்படி நம்மை அமைத்துக்கொள்ளும் ஆற்றல் நம்மிடமே இருக்கிறது. நாம் இப்போது இருக்கும் நிலை நம்முடைய முன்வினைகளின் பலன் என்றால், எதிர்காலத்தில் நாம் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அதை நாம் நமது தற்போதைய செயல்களால் உண்டாக்கிக் கொள்ள முடியும் என்பது வெளிப்படை.
சுவாமி விவேகானந்தர் Share on WhatsApp
இந்த உலகம் மிகப்பெரிய ஓர் உடற்பயிற்சிக் கூடம். இங்கு நாம் நம்மை வலிமையுடவர்களாக மாற்றிக் கொள்வதற்காக வந்திருக்கிறோம்.
சுவாமி விவேகானந்தர் Share on WhatsApp
எதை விதைத்தோமோ அதைத்தான் அறுவடை செய்கிறோம். நமது விதியை நாமே வகுத்துக்கொள்கிறோம். எனவே, யாரையும் தூற்றுவதற்கும் ஒருவருமில்லை; பாராட்டுவதற்கும் ஒருவருமில்லை. காற்று வீசியபடி இருக்கிறது. பாய்மரங்களை விரித்துக் காற்றை பயன்படுத்திக்கொள்ளும் கப்பல்கள் தங்கள் வழியே முன்னேறிச் செல்கின்றன. ஆனால் பாய்களை சுருட்டி வைத்துள்ள கப்பல்கள் காற்றை ஏற்றுப் பயன் பெறுவதில்லை. இது காற்றினுடைய குற்றமாகுமா?
சுவாமி விவேகானந்தர் Share on WhatsApp
உலகம் எவ்வாறு நடக்கின்றதோ உலகத்தோடு பொறுந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும்.
சுவாமி விவேகானந்தர் Share on WhatsApp
கீழ்த்தரமான தந்திரத்தால் இந்த உலகில் மகத்தான காரியம் எதையும் சாதித்து விட முடியாது.
சுவாமி விவேகானந்தர் Share on WhatsApp
நாம் இன்று இப்படி இருப்பதற்கு நாமே பொறுப்பு. இனி எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அப்படி நம்மை நாமே மாற்றிக் கொளும் ஆற்றலும் நம்மிடம் உள்ளது!
சுவாமி விவேகானந்தர் Share on WhatsApp
நோக்கம் எது என்பதை முதலில் தீர்மானி. அதுவே இலக்கு என்பதை உறுதிசெய்து கொள். கையில் பணம் இல்லையே, உடலில் வலு இல்லையே, உதவி செய்ய நண்பர்கள் இல்லையே என்றெல்லாம் யோசித்து நேரத்தை வீணாக்காதே! எதற்கும் பயப்படாதே, தயங்காதே. இலக்கை நோக்கி அடியெடுத்து வை. தொடர்ந்து முன்னேறு, சோதனைகள் விலகும். பாதை தெளிவாகும். நோக்கத்தை அடைந்தே தீருவாய்! அதை யாராலும் தடுக்க முடியாது.
சுவாமி விவேகானந்தர் Share on WhatsAppExplore the wisdom of Swami Vivekananda in their own words.
Browse books on Amazon →As an Amazon Associate, we earn from qualifying purchases.
One beautiful quote delivered to your inbox every morning. Free forever.
No spam. Unsubscribe anytime.